ETV Bharat / city

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

author img

By

Published : May 16, 2021, 3:07 PM IST

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்
ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச் சுருக்கம்

மின்சார வாரிய தலைவராக ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவராகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை: தமிழ்நாட்டின் நிலை குறித்து மத்திய அரசிற்கு தெரிவிக்கத் தயார்!

புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதின் மீதான கருத்துகளையும், பரிந்துரைகளையும் மத்திய அரசிற்கு தெரிவிக்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கின் மத்தியில் சுட்டிக் குழந்தைகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது எப்படி?

ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகள், விளையாட்டாக செய்யும் சில செயல்கள் விபரீதங்களாக மாறி விடுகின்றன. குழந்தைகளைப் பொறுப்பாக பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கடமை என குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் மூர்த்தி குருநாதன் தெரிவிக்கிறார்.

மாவட்டங்களிடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்!

தமிழ்நாடு அரசின் புதிய கரோனா கட்டுப்பாடுகள் மே 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மாவட்டங்களுக்கிடையேயும், மாவட்டத்துக்குள்ளேயும் பயணம் செய்ய இ-பதிவு அவசியம் என அரசு ஆணையிட்டுள்ளது.

கரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் உயிரிழப்பு!

காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆவின் பால் விலைக் குறைப்பு: சொமேட்டோ, டன்சோ மூலம் வீட்டில் விற்பனை செய்ய ஏற்பாடு!

நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் விலைக் குறைக்கப்பட்ட ஆவின் பால் விற்பனையை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

கரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

ஒரே நாளில் 32 பேர் உயிரிழப்பு - புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா துயரம்!

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பால் இதுவரை இல்லாத அளவிற்கு 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரூ. 100 கேட்டால் 500 ரூபாய் கொடுத்த ஏடிஎம் - ரகசியமாக பணமெடுத்த மக்கள்!

ஹைதராபாத்: ஏடிஎம்-இல் 1,000 ரூபாய் எடுக்க முயன்ற வாடிக்கையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனாவால் ஒரே நாளில் 4,077 பேர் உயிரிழப்பு!

நேற்று(மே.15) ஒரே நாளில் மூன்று லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.