ETV Bharat / city

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm

author img

By

Published : May 16, 2020, 1:01 PM IST

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm
1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm

லாரி விபத்தில் உயிரிழந்த 24 தொழிலாளர்கள்: பிரதமர் மோடி இரங்கல்

லக்னோ: லாரி விபத்தில் 24 குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததையடுத்து, அவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'குடிபெயர்ந்தோரை மாநில அரசுகள் பொறுப்புடன் கையாள வேண்டும்' - மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: பல்வேறு மாநிலங்களிலுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்களை மாநில அரசுகள் பொறுப்புடன் கையாள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எல்ஜி பாலிமர்ஸ் அபாயம்: நச்சு வாயுவை சுவாசித்த மக்கள் சாலைகளில் சரிந்து விழும் காட்சிகளின் பதிவு!

விசாகப்பட்டினம் எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தின் வேதிப் பொருளின் மூலம் ஏற்பட்ட வாயு கசிவு குறித்த கண்காணிப்பு படக்கருயின் பதிவுகள் வெளியாகியுள்ளன. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலைகளில் சரிந்து விழும் காட்சிகள் பதிவாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

'அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... வாகனமும் கிடைக்கல' - களத்தில் இறங்கிய சிறுவன்!

லக்னோ: உத்தரப் பிரதேசத்திலிருந்து பிகார் வரை ரிக்‌ஷாவில் உடம்பு சரியில்லாத தந்தையை அழைத்துச் சென்ற சிறுவனின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கட்சிக்குள் அதிரடி மாற்றத்தை மேற்கொள்ளும் சோனியா

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களாக சி. பி. மிட்டல், குல்தீப் இந்தோராவை நியமித்து அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

'23ஆம் புலிகேசியின் அரசியல் வடிவம் ஸ்டாலின்' - அமைச்சர் கிண்டல்

சென்னை: இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்பட நாயகனின் அரசியல் வடிவமாகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திகழ்வதாகத் தமிழ்ப் பண்பாடுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் கிண்டல் செய்துள்ளார்.

அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் விஜய பாஸ்கர் திடீர் ஆய்வு!

செங்கல்பட்டு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திடீரென ஆய்வுமேற்கொண்டார்.

மத்திய பிரதேசத்தில் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு

போபால்: சாகர் மாவட்டத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

நேற்று செல்வா... இன்று கௌதம் - பிடித்த காட்சிகளை பகிரும் ஒளிப்பதிவாளர்

கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா ஜெரோமியா நடிப்பில் உருவான திரைப்படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. இந்தத் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அரவிந்த் கிருஷ்ணா படத்தில் தனக்குப் பிடித்த காட்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'உனக்கு நான் இருக்கேன் நண்பா' - கரோனா போரில் மோடிக்கு உதவும் ட்ரம்ப்!

வாஷிங்டன்: கரோனா தடுப்புப் பணிக்காக இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.