ETV Bharat / city

கரோனாவால் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு

author img

By

Published : Sep 30, 2021, 6:49 PM IST

கரோனா தாெற்றால் மாணவர்களுக்குச் சரியான முறையில் கல்வி கிடைக்காததன் காரணமாகவே குழந்தைத் திருமணங்கள், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ‘சைல்டு ரைட்ஸ் அண்ட் யு’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தை திருமணங்கள்
குழந்தை திருமணங்கள்

சென்னை: குழந்தைத் திருமணங்கள், குழந்தைத் தொழிலாளர் அதிகரிப்பு குறித்து குழந்தைகளின் உரிமைகளுக்காகச் செயல்பட்டுவரும் (Child Rights and You) ‘சைல்டு ரைட்ஸ் அண்ட் யு’ அமைப்பு கூறியதாவது, “கரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குழந்தைகளின் கல்விக்கான வாய்ப்பும், கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

கிராமப் புறத்திலுள்ள மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளுக்கு விரும்பிச் செல்லத் தேவையான நம்பிக்கையை இந்த அமைப்புச் செயல்படுத்திவருகிறது.

கரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல் இழப்புகளை ஈடுசெய்ய தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'கற்பித்தல் வாசிப்பு இயக்கம்' சிறப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பு

கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் நேரடியாக இயங்காத நிலையில், குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துவந்தது கண்டறியப்பட்டது. கல்விக்கான வாய்ப்பு இல்லாமல் இருப்பதாலே குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் அதிகரித்துள்ளனர்.

இந்தக் குழந்தைகளைக் காப்பது இந்தக் காலக்கட்டத்தில் அனைவரின் இன்றியமையாத கடமையாகும். இந்தக் கரோனா காலத்தில் விளிம்புநிலை சமூக மக்களின் குழந்தைகளுக்கு இடைவெளியில்லா கல்வியைத் தொடர்வதன் மூலம் அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியை திருமணம் செய்த விவசாயி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.