திரைத்துறை முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்திய சீனு ராமசாமி

author img

By

Published : Jun 17, 2022, 3:21 PM IST

திரைத்துறை முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்திய சீனு ராசாமி

தமிழ்நாட்டின் திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கருணாநிதி ஆகியோர் சிலைகளுக்கு இயக்குநர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார்.

விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடித்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் முதன்முறையாக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி எழுதி இயக்கும் 'மாமனிதன்' திரைப்படம் வரும் ஜூன் 24 திரைக்கு வருகிறது. இப்படத்தை நடிகர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டூடியோ நைன் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

இந்த தருணத்தில் தமிழ்நாட்டில் திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கருணாநிதி ஆகியோர் சிலைகளுக்கு இயக்குநர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார்.

திரைத்துறை முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்திய சீனு ராசாமி
திரைத்துறை முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்திய சீனு ராசாமி

அதை தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்" என்றார்.

இதையும் படிங்க: ரஜினி - நெல்சன் திரைப்படத்திற்கு டைட்டில் 'ஜெயிலர்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.