ETV Bharat / city

மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கண்டறியப்பட்டது வேதனை - சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன்

author img

By

Published : Apr 26, 2022, 7:16 AM IST

மனிதர்களின் ரத்தத்தில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கண்டறியப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று (ஏப்.25) சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பிளாஸ்டிக்கை நிலம், காடுகளில் வாழும் வன உயிரினங்களும் ஏரிகள், குளங்கள், ஆறுகள், கடல், கடல் வாழ் உயிரினங்களான ஆமைகள், மீன்கள் உள்ளிட்டவைகளும் உண்ணுகின்றன. பின் அவற்றை மனிதர்களும் உண்ணுகிறார்கள்.

1682 டன் பிளாஸ்டிக் பறிமுதல்: இவ்வாறாகப் படிபடியாகப் பிளாஸ்டிக் நுண் துகள்கள் மனிதர்களின் ரத்தத்தில் கலந்து இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது வேதனையாக உள்ளது. பிளாஸ்டிக்கை ஆரம்ப நிலையிலையே தடுக்க வேண்டும், பள்ளி குழந்தைகள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தமாட்டேன் என அவர்களை உறுதிமொழியேற்க வைக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பிறகு கிட்டதட்ட 1682 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.105 கோடி அபராதமும் விதிக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக்கை தடை செய்யும் பணிகளில் மிகச் சிறப்பாக செயல்படுவதாக சென்னை மாநகர மேயரும், மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி ஆகியோரை பாரட்டினார்.

மேலும், சென்னை மெரினா கடற்கரை, புதுக்கோட்டை , நாகப்பட்டினத்தில் உள்ள நெய்தல் கடற்கரை, ராமநாதபுரத்தில் உள்ள குஷி கடற்கரை ஆகிய கடற்கரைகள் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்றும், ஆயிரம் மரங்கள் வீதத்தில் 10,000 குறுங்காடுகள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மரத்தூள்கள் மூலம் வீட்டு உபயோகப்பொருட்கள் செய்து அசத்தும் நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.