மாபெரும் முகாமில் இன்று மட்டும் 17 லட்சம் பேருக்கு தடுப்பூசி

author img

By

Published : Oct 3, 2021, 11:04 PM IST

covid vacinatted camp done on 17 lakh doses today onwards,  நான்காவது மாபெரும் தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு முழுவதும் இன்று (அக். 3) நடைபெற்ற நான்காவது மாபெரும் தடுப்பூசி முகாமில் 17,19,544 பயனாளிகளுக்கு கரோனா தொற்று தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 24,882 மையங்களில் இன்று (அக். 3) நான்காவது மாபெரும் கரோனா தொற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இந்த மையங்களில் 18 வயதிற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கரோனா தொற்று தடுப்பூசி அளிக்கத் திட்டமிடப்பட்டது.

மாபெரும் முகாமில் இதுவரை

முதலாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதில், 28.91 லட்சம் பயனாளிகளுக்கும், செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் 16.43 லட்சம் பயனாளிகளுக்கும் மற்றும் செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் 25.04 லட்சம் பயனாளிகளுக்கும் கரோனா தொற்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

சுமார் 15 மாவட்டங்களில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக தடுப்பூசி பணிகள் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், இன்று (அக். 3) நடைபெற்ற நான்காவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 17,19,544 பயனாளிகளுக்கு கரோனா தொற்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் முதல் தவணையாக 9 லட்சத்து 68 ஆயிரத்து 10 பயனாளிகளுக்கும்; இரண்டாவது தவணையாக 7 லட்சத்து 51 ஆயிரத்து 534 பயனாளிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

நாளை தடுப்பூசி கிடையாது

மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,44,75,866 பயனாளிகளுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மாபெரும் கரோனா தொற்று தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஆய்வு செய்தார்.

மேலும், மாநிலத்தில் இன்று நடைபெற்ற நான்காவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு நாளை (அக். 4) கோவிட் தடுப்பூசிப் பணிகள் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாட்டின் சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின் - குலாம் நபி ஆசாத் புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.