ETV Bharat / city

தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்- முதலமைச்சர்

author img

By

Published : Aug 14, 2021, 5:48 PM IST

Updated : Aug 14, 2021, 6:55 PM IST

cm-stalin-says-election-promises-will-be-fulfilled-gradually
தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்- முதலமைச்சர்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று, திமுக ஆட்சியமைத்து இன்றோடு 100 நாள்கள் நிறைவடைகிறது. இந்நிலையில், திமுகவின் 100 நாள் ஆட்சியைப் பாராட்டி திமுகவின் கூட்டணிக்கட்சியின் தலைவர்கள் இன்று சட்டப்பேரவையில் பேசினர்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " எனக்கு அடுத்து வரும் நாள்கள் குறித்தே கவலையாக இருக்கிறது. திமுகவிற்காக வாக்களிக்காதவர்கள்கூட இப்போது, தேர்தல் நடந்தால் கண்டிப்பாக திமுகவுக்கு வாக்களிப்பார்கள்.

தொடர்ச்சியான மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டு நிறைவேற்றி உள்ளோம். வரி இல்லாத நிதி நிலை அறிக்கையை கொடுத்துள்ளோம்.

படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். தமிழ்நாட்டின் இழந்த பெருமை மீட்டெடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளோம். சீர்மிகு தமிழ்நாட்டை அனைவரின் துணையோடு உருவாக்குவோம். இது எனது அரசு அல்ல, நமது அரசு" என்றார்.

இதையும் படிங்க: 100 நாள் ஆட்சி- முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்

Last Updated :Aug 14, 2021, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.