முதலமைச்சராக முதல் பொங்கல்: கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

author img

By

Published : Jan 14, 2022, 3:23 PM IST

அண்ணா  கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்டாலின் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்திற்கு அவரும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் இருவரும் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஆ. ராசா எம்பி, மாநிலங்களவை உறுப்பினர் திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ். இளங்கோவன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஸ்டாலின் உடன் சென்று மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ள ஸ்டாலின், "தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்! திமுக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுற செய்யும் ஊக்கத்தை பெறுகிறேன்.

உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன். இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, நெகிழிப் பைகளை இனி பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவோம்!" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறும் காளைகளை அடக்க துடிக்கும் வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.