தமிழ்நாட்டில் 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன சோழர் கால சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

author img

By

Published : Sep 5, 2022, 1:31 PM IST

சோழர் கால சிலை அமெரிக்கவில் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டின் தஞ்சையில் 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சோழர் கால நடராஜர் சிலை, அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் திருவீதிக்குடியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் செப்டம்பர் மாதம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தஞ்சாவூர் திருவீதிக்குடி கண்டியூரில் உள்ள 2,000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்த 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடராஜர் சிலையை 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது.

35 ஆண்டுகளாக எந்த நடவடிக்கை இல்லை: இதுதொடர்பாக 35 ஆண்டுகளுக்கு முன்பு நடுகாவேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நடராஜர் சிலையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

62 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சோழர் கால சிலை அமெரிக்கவில் கண்டுபிடிப்பு
62 ஆண்டுகளுக்கு முன் திருடுபோன சோழர் கால சிலை அமெரிக்கவில் கண்டுபிடிப்பு

இணையம் மூலம் கண்டுபிடிப்பு: இதுதொடர்பான விசாரணையில், நடராஜர் சிலையை திருடிவிட்டு போலியான சிலையை வைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, திருடுப்போன நடராஜர் சிலையின் புகைப்படத்தை பாண்டிச்சேரி இந்தோ பிரெஞ்சு நிறுவனத்திடம் பெற்ற போலீசார், புகைப்படத்தை வைத்து இணையதளங்களில் தேடியுள்ளனர். அப்போது நியூயார்க்கில் உள்ள ஆசிய சொசைட்டி அருங்காட்சியகத்தில் நடராஜர் சிலை இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலையை, யுனெஸ்கோ ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோயிலில் வேறு ஏதேனும் சிலைகள் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.