ETV Bharat / city

15 வயது சிறுமி பாலியல் தொல்லை வழக்கு;21 பேர் குற்றவாளிகள் - சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி

author img

By

Published : Sep 15, 2022, 8:25 PM IST

Etv Bharat
Etv Bharat

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கான தண்டனை விவரத்தை வரும் செப்.19 ஆம் தேதி அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.

சென்னையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த வழக்கில், இன்ஸ்பெக்டர் உட்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு அவர்களுக்கான தண்டனை விவரங்களை வரும் செப்.19ஆம் தேதி அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.

சென்னையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர், உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ)வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 22 பேரை கடந்த 2020ஆம் ஆண்டு நவ.21ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேரில், இரு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாகினர். மீதமுள்ள 22 பேரில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை காலகட்டத்தின்போது உயிரிழந்து விட்டார். மீதமுள்ள 21 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

இந்த வழக்கை இன்று (செப்.15) விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், அச்சிறுமியின் உறவினர், சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா(எ)கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம்(எ)அஜய் கண்ணண் ஆகிய 21 பேரும் குற்றவாளிகள் என தீர்மானித்து தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனைகள் விவரத்தை வரும் 19ஆம் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிகாரிகளின் வீட்டு நாய்களை பராமரிக்க நிர்பந்திப்பதாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.