ETV Bharat / city

மதசார்பற்ற நாட்டை பிளவுப்படுத்த முயற்சி - மாணவர்கள் கண்டனம்

author img

By

Published : Dec 18, 2019, 4:52 PM IST

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

students
students

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்தும் 200க்கும் மேற்பட்ட ஜெயின் கல்லூரி மாணவர்கள் வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர்கள், “குடியுரிமை திருத்த சட்டம் தேவையற்றது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை என்றும், இலங்கை, மியான்மர் ஆகிய நாட்டில் இருந்து வரும் மக்களுக்கு குடியுரிமை இல்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்த ஒரு குடிமகனுக்கும், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படக் கூடாது என்றுள்ளது. இந்த சட்டத்தால், பாஜக அரசு மதசார்பற்ற நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்ன செய்கிறதென்றே தெரியவில்லை. குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்”என்றனர்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஜெயின் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பின்னர், தகவலறிந்து அங்கு வந்த மீனம்பாக்கம் காவல் துறையினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: போராட்டம் தொடரும் - சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டவட்டம்!

Intro:குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவரகள் போராட்டம்Body:குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சென்னை கிண்டி அடுத்த மீனபாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி வளாகத்தின் வெளியே மாணவர்கள் குடியுரிமை சட்ட திருத்தம் மசோதாவை எதிர்த்தும்டெல்லியில். டெல்லி ஜாமிய மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் தேவையற்றது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் இருக்கும் இந்துக்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை இல்லை என கூறியுள்ளனர். இலங்கை தமிழர்கள்,மியான்மர், தீபெத் ஆகிய நாட்டில் இருந்து வரும் மக்களுக்கு குடியுரிமை இல்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்த மசோதாவால் யாருக்கும் பாதிப்பில்லை என ஒரு பொய்யான பரவலை மக்களிடம் கூறி வருகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்த ஒரு குடிமகனுக்கும் மதத்தின் அடிப்படையில் குடியுரிமைச்சட்டம் வழங்கப்படக் கூடாது என உள்ளது.

தற்போது பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த சட்டத்திருத்த மசோதாவால் மதச்சார்பற்ற நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து வருகின்றனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

பின்னர் தகவலறிந்து வந்த மீனம்பாக்கம் காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மாணவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.