ETV Bharat / city

சென்னை குடிநீர் தேவைக்கு 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை - அமைச்சர் கே.என்.நேரு !

author img

By

Published : Apr 26, 2022, 10:54 PM IST

சென்னை
சென்னை

சென்னையின் குடிநீர் தேவைக்கு 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைக்கும் பணி 1 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் பங்கேற்று திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு, "கங்காதீஸ்வரர் கோயில் குளத்தை சீரமைத்து, குளத்தின் அருகில் உள்ள சாலைகளில் வரும் மழைநீரை சுத்திகரித்து குளத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும், சிங்கார சென்னை திட்டத்திற்கு முதலமைச்சர் 500 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆயிரத்து 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை, தற்போது 900 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே உள்ளது, 200 மில்லியன் லிட்டர் பற்றாக்குறையாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 538 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட இருக்கிறது. அதற்காக சாலைகளில் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. ஒரு மாதத்தில் அந்த பணிகள் முடிந்துவிடும். தமிழ்நாட்டின் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான ஆவணப்படம்; இயக்குநருக்கு சம்மன் அனுப்பிய காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.