அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்க வேண்டிய எண் இதுதான் - தெரிஞ்சுக்கங்க மக்களே!

author img

By

Published : May 13, 2022, 4:57 PM IST

அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்க வேண்டிய எண்

தமிழ்நாட்டில் மத்திய அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால், புகார் அளிக்க வேண்டிய எண்கள், மெயில் முகவரியை சென்னை மண்டல சிபிஐ குறுஞ்செய்தியாக பொதுமக்களுக்கு அனுப்பியுள்ளது.

சென்னை:இந்தியா முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் லஞ்சப் புகார் தொடர்பாக சிபிஐ அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த அடிப்படையில் கடந்த மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பணிபுரியும் 6 மத்திய அரசு ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாது நேற்று சிபிஐ உதவி ஆய்வாளர்கள் 4 பேர், வழக்கு ஒன்றில் 25 லட்சம் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்கள் இது போன்று லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்குமாறு எண்களை சிபிஐ அறிவித்துள்ளது.

9445160988 என்ற செல்போன் எண்ணிலும்,044 28173816,044 28170992 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் hobacchn@cbi.gov.in என்ற மெயில் ஐடியிலும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஆளுநர் விழாவில் பத்திரிகையாளர்களுக்குப் பணவிநியோகம் - எரிச்சல் அடைந்த பத்திரிகையாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.