புதுச்சேரி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்!

author img

By

Published : Aug 25, 2021, 6:46 PM IST

முன்னாள் அமைச்சர் ராஜவேலு
முன்னாள் அமைச்சர் ராஜவேலு ()

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், நாளை (ஆக.26) மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று சட்டப்பேரவை கேபினட் அறையில் தொடங்கி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லக்ஷ்மிநாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவண குமார், தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனுதாக்கல் செய்த ராஜவேலு

நடைபெற்று முடிந்த முதல் அமைச்சரவைக் கூட்டம்

என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது நிதிநிலை அறிக்கை தாக்கலில் இடம்பெறவுள்ள மிக முக்கிய அறிவிப்புகள், சலுகைகள், மக்கள் நல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னதாக புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நடைபெறவிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் ராஜவேலு
முன்னாள் அமைச்சர் ராஜவேலு

பின்னர் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் பின்னரே 2021 - 2022ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதுச்சேரி மாநில துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜவேலு போட்டியிடுகிறார்.

ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் ராஜவேலு?

இதனையடுத்து போட்டியிடுவது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலாளர் முனுசாமியிடம், ராஜவேலு மனுத்தாக்கல் செய்தார்.

நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நாளை நடைபெறவுள்ள புதுச்சேரி மாநில சட்டப்பேரவை துனை சபாநாயகர் தேர்தலில் ராஜவேலு ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விவசாயக்கடன் 5% உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.