ETV Bharat / city

செல்போன் கடை உரிமையாளருக்கு சரமாரி வெட்டு - மூவர் கைது

author img

By

Published : Dec 3, 2021, 7:58 PM IST

தப்பி ஓடிய மூவர் கைது
தப்பி ஓடிய மூவர் கைது

செல்போன் கடை உரிமையாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய மூவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் மஸ்தான் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ரசாக் (30). இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரசாக் பம்மல் அடுத்த நாகல்கேணி பெரியார் நகர் ஜங்ஷனில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தை மறித்து ரசாக்கை சரமாரியாகக் கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது ரசாக் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்துல் ரசாக்கை வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் யார்?

விசாரணையில் பம்மல் பகுதியைச் சேர்ந்த குள்ள மதன் என்கிற மதன்(20), மோகன்ராஜ்(23), விஜய்(25) என தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் பழந்தண்டலம் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

பின்னர் காவல்துறையினர் அவர்களைப் பிடிக்க முற்பட்டபோது மூவரும் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். அப்போது மூவரும் அங்கிருந்த பத்து அடி பள்ளத்தில் தவறி விழுந்தனர். இதில் மதனுக்கு வலது கையும்,மோகனுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மூவரையும் கைது செய்து குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

சிகிச்சைக்குப் பிறகு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் மூவரும் பல்லாவரம்,பம்மல், அனகாபுத்தூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் கடைகளிலும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை மடக்கி கத்தியைக் காட்டி மாமூல் கேட்டுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்த கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நான் பேசல.. பதறிய செல்லூர் ராஜூ.. சசிகலா ஆடியோ விவகாரத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.