ETV Bharat / city

வழக்கறிஞரின் செயலால் பதவியை ராஜினாமா செய்ய எண்ணினேன் - நீதிபதி வேதனை

author img

By

Published : Dec 23, 2021, 2:56 PM IST

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை

காணொலி காட்சி விசாரணையின்போது வழக்கறிஞர் பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அசிங்கமான செயலால் பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என நினைத்ததாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை: கரோனா தொற்று ஆரம்பித்தபோது நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறைந்தபின், நேரடி, காணொலிக் காட்சி விசாரணை எனக் கலப்பு விசாரணை முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின்போது, நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் என்பவர் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது சக வழக்கறிஞர்கள், நீதித் துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிபிசிஐடி காவல் துறை வழக்குப்பதிவு

இந்தக் காட்சிகளைச் சிலர் பதிவுசெய்ததால் இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரம் தொடர்பாகத் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் அமர்வு சம்பந்தப்பட்ட வழக்கறிஞரைத் தொழில் செய்யத் தடைவிதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட காட்சிகளைச் சமூக வலைதளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

நீதிபதி பதவியை விடலாமா என நினைத்தேன்

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக வேறு ஒரு வழக்கு விசாரணையின்போது இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட நீதிபதி பி. என். பிரகாஷ் இந்தச் சம்பவம் மிகப்பெரிய அசிங்கம் என்றும் தனது பதவியை ராஜினாமா செய்துவிடலாமா? என யோசித்ததாக வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: வழக்கறிஞரின் சேட்டை வீடியோ: சமூக வலைதளங்களுக்கு சைபர் கிரைம் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.