ETV Bharat / city

கரோனா தொற்று உருமாற்றங்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் "ஸ்பைக் புரதத் தடுப்பூசிகள்"

author img

By

Published : Sep 27, 2022, 8:38 PM IST

Etv Bharatகரோனா உருமாற்றங்களுக்கு எதிராக ஸ்பைக் புரதத் தடுப்பூசிகளின் செயல்பாடு
Etv Bharatகரோனா உருமாற்றங்களுக்கு எதிராக ஸ்பைக் புரதத் தடுப்பூசிகளின் செயல்பாடு

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், கரோனா தொற்றின் பலதரப்பட்ட உருமாற்றங்களுக்கு எதிராக ஸ்பைக் புரத தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதை கண்டறிந்துள்ளனர்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், கரோனா தொற்றின் பலதரப்பட்ட உருமாற்றங்களுக்கு எதிராக ஸ்பைக் புரத தடுப்பூசிகள் பயனுள்ள வகையில் செயல்படுவதை கண்டறிந்துள்ளனர். டெல்டா பிளஸ், காமா, ஜீட்டா, மிங்க், ஒமைக்ரான் உருமாற்றங்களால் பாதிப்பு ஏற்படும்போது, நோய் எதிர்ப்புத் திறன் உருவாகி தடுப்பூசியால் தூண்டப்பட்ட டி-செல்களும் அவற்றை சமாளிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹானில் முதலில் உருவான கரோனா நோய்த்தொற்றை அடிப்படையாகக் கொண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட நிலையில், அதற்குப் பிந்தைய உருமாற்றங்களால் நோய்த்தொற்று ஏற்படும்போது அதன் எதிர்வினை குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறியத் தொடங்கினர்.

கரோனா தொற்றின் உருமாற்றங்களின்போது, ஸ்பைக் புரதத்தில் மூலக்கூறு நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த உருமாற்றங்கள் எபிடோப்புகள் என்றழைக்கப்படும் டி-செல்களாலான புரத வரிசைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன. இதுகுறித்து சென்னை ஐஐடி பூபத்-ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் உயிரித் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் வாணி ஜானகிராமன் கூறும்பாேது, ‘ஸ்பைக் புரதத்தின் அடிப்படையிலான வெவ்வேறு வடிவ தடுப்பூசிகளின் செயல்திறன் நோய் எதிர்ப்புத் திறனைத் தூண்டுவது மட்டுமின்றி டி-செல்களால் ஏற்கக் கூடியதா என்பதையும் பொருத்ததாகும்.

உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலில் டி-செல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்பட்ட செல்லின் மேற்பரப்பில் எம்எச்சி எனப்படும் பெரிய மூலக்கூறுடன் இணைந்து அளிக்கப்படும் எபிடோப்புடன் பிணைக்கும் ஏற்பிகளை டி-செல்கள் பெற்றுள்ளன. புதிதாகவோ அல்லது தடுப்பூசி நினைவு மூலமோ நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தூண்டி விடுகிறது.எபிடோப்புகள் என்றழைக்கப்படும் புரோட்டின் துண்டுகள் உட்செலுத்தப்படும் வைரஸ், வைரஸ் பகுதி உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தூண்டுகிறது.

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்
சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்

ஸ்பைக் புரத எம்ஆர்என்ஏ தடுப்பூசியைப் பொறுத்தவரை, மெசஞ்சர்- ஆர்என்ஏ-வை முதல் உயிரியாக அறிமுகப்படுத்தி புரதத்தை உருவாக்கும் வகையில், சிறிய துண்டுகளாக செல்கள் வெட்டப்பட்டு (எபிடோப்புகள்) டி-செல்களுக்கு வழங்கப்படுகிறது. கடைசியில் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி விடுகிறது. இரு முறைகளிலுமே, எதிர்கால நோய்த்தொற்றுக்கு எதிராக பாதுகாப்பதற்கான செயல்திறன் நினைவில் கொள்ளப்படுகிறது.

டெல்டா பிளஸ், காமா, ஜீட்டா, மிங்க் மற்றும் ஓமிக்ரான் ஆகிய சில வகைகளில் டி-செல் எபிடோப்புகளில் (சிடி4+, சிடி8+ ஆகிய இரண்டும்) மூலக்கூறு வித்தியாசங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். பிறழ்வு ஏற்பட்ட எபிடோப் மூலக்கூறு கட்டமைப்புகள் நோய் எதிர்ப்பு தகவல் கருவிகள் மூலம் மேலும் பகுப்பாய்வு செய்யப்பட்டது. எம்எச்சி மூலக்கூறுகளை பிணைக்கும் திறன் உள்ளதா எனவும், டி-செல்களை அங்கீகரிக்கும், தூண்டிவிடும் திறன் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒமிக்ரானைத் தவிர மற்ற அனைத்து உருமாற்றங்களிலும் சிடி4+, சிடி8+ ஆகிய இரு எபிடோப்களும் குறைந்தது 90 விழுக்காடு அளவுக்கு பாதுகாக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். ஒமிக்ரானில் கூட ஏறத்தாழ 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சிடி4+, சிடி8+ எபிடோப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், நோய் எதிர்ப்புத் தகவல் கருவிகள் எம்ஹெச்சி மூலக்கூறுகளை பிணைக்கும் வகையில் எபிடோப்புகளின் முக்கியமாக தக்கவைக்கப்பட்ட திறனை முன்கூட்டியே கணித்து டி-செல் செயல்திறனைத் தூண்டுகின்றன.

தடுப்பூசி மூலம் உடல் ஏற்றுக்கொண்ட டி-செல் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தவிர்க்கும் வகையில் எபிடோப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பெரிய அளவில் இல்லை. எனவே, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைக்கப்படும் சூழலில், உருமாற்றங்களில் தடுப்பூசி எதிர்ப்பு ஆற்றலாக மாறாமல் போகலாம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆயுர்வேத டீ குடித்தால் இவ்வளவு நன்மையா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.