ETV Bharat / city

Top 10 News @ 9 PM

author img

By

Published : Nov 8, 2021, 9:18 PM IST

Top 10 News @ 9 PM
Top 10 News @ 9 PM

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

1.ரணகளத்திலும் கிளுகிளுப்பு - கடும் வெள்ளத்திலும் கட்டிங் போட்ட குடிமகன்கள்!

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழைபெய்து வரும் நிலையில், மழை வெள்ளத்திற்கும் மத்தியிலும் இருவர் கூச்சமின்றி மது அருந்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

2.LAKHIMPUR KHERI VIOLENCE: காவல் துறை விசாரணையில் அதிருப்தி - உச்ச நீதிமன்றம்

லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் காவல் துறையினரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்றும்; விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3.மழைநீரை அகற்றாத மாநகராட்சி - ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடக கள ஆய்வில் தகவல்

சென்னை மாநகராட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடக கள ஆய்வில் எந்தவொரு பகுதியிலும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

4.இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னரே காப்பீடு செய்துகொள்ள வேண்டும் - திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

விவசாயிகள் இறுதி நேரம் வரை பிரிமீயம் செலுத்தக் காத்திருக்காமல், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன்னரே இத்திட்டத்தில் தங்களது பயிர்களைக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

5.கோயில்களின் பாதுகாவலர்கள் நியமனத்தை அந்நிர்வாகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

கோயில்களில் இரவு நேரப் பாதுகாவலர்கள் நியமனம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட வழக்கில், கோயில் நிர்வாகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனவும் கூறி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்தது சென்னை உயர் நீதிமன்றம்.

6.வேலூரில் தொடர் மழையினால் மூன்று பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, காட்பாடியில் உள்ள மோர்தானா அணை தனது முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது.

7.துணை பிரதமராகும் கனவில் முல்லைப்பெரியாறு அணையை கேரளாவிடம் அடகு வைத்துள்ளார் ஸ்டாலின் - அண்ணாமலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை பிரதமராக முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை கேரளாவிடம் அடகு வைத்துள்ளார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

8.முன்விரோதம்: ஐந்து வயது சிறுவனைக் கொலை செய்த பெரியப்பா மகன் கைது

திண்டுக்கல்: நத்தம் அருகே முன்விரோதம் காரணமாக, ஐந்து வயது சிறுவனைக் கொலை செய்த பெரியப்பா மகனைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

9.ஐபிஎல் தொடர் முக்கியமல்ல - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் தொடரை விட நாட்டிற்காக விளையாடுவதுதான் முக்கியம் என மூத்த கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

10.Kotkapura Incident: குற்றப்பத்திரிகை எங்கே - காங்கிரஸ் அரசிடம் சித்து காட்டம்

கோட்காபூரா காவல் துறை துப்பாக்கிச்சுடுதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் ஏன் தாமதமாகிறது என பஞ்சாப் அரசிடம் நவ்ஜோத் சிங் சித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.