ETV Bharat / city

1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்- மா.சுப்பிரமணியன்

author img

By

Published : May 4, 2022, 8:07 PM IST

8ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெறவுள்ளது
8ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெறவுள்ளது

தமிழ்நாட்டில் வருகிற 8ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெறவுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அபிராமபுரத்தில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர் மயிலை த.வேலு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கோடை காலத்தில் வெப்பத்தை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து அபிராமபுரத்தில் உள்ள பள்ளியில் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வெப்பத்திலிருந்து பாதுகாப்பது எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து இந்த விழிப்புணர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் வேலூர், தருமபுரி மதுரை, கரூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை அவசியமில்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

மேலும், கோடை வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. கோடை விடுமுறையை முன் கூட்டியே அறிவிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்கும். பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களை கணக்கெடுப்பு முககவசம் வழங்குவது குறித்தும் பள்ளி கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா பரவல் சுற்றி நெருப்பு, நடுவில் தமிழ்நாடு என்பது போன்று உள்ளது, தமிழ்நாட்டை சுற்றியுள்ள மாநிலங்களில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் 8-ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும், XE வகை தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை, பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை. அந்த வகை தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைவாகத்தான் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை XE வகை தொற்று கண்டறியப்பட வில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் - தேர்வுத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.