ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 589 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Jun 17, 2022, 9:32 PM IST

covid
covid

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 589 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 15 ஆயிரத்து 742 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பங்களாதேஷ் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த தலா ஒரு நபர்கள் உட்பட புதிதாக 589 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 56 லட்சத்து 76 ஆயிரத்து 614 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் 34 லட்சத்து 59 ஆயிரத்து 589 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் இரண்டாயிரத்து 694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் 208 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 18 ஆயிரத்து 866 என உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 286 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 119 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 39 நபர்களுக்கும், திருவள்ளூரில் 35 நபர்களுக்கும், கன்னியாகுமரியில் 20 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 16 நபர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் தொற்று பரவலாகக் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதேபோல் மாநில அளவில் நோய்த்தொற்று பரவல் விகிதம் 3.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொற்று பரவல் விகிதம், அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 12.6 சதவீதமாகவும், சென்னை மாவட்டத்தில் 7.4 சதவீதமாகவும் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 85 நூலகங்களுக்கு போட்டித்தேர்வுக்கான 13 ஆயிரம் நூல்கள் வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.