ETV Bharat / city

குரூப் 4: ஒரு பணியிடத்திற்கு போட்டித் தேர்வு எழுதிய சுமார் 255 பேர்

author img

By

Published : Jul 24, 2022, 5:12 PM IST

தமிழ்நாடு அரசு பணிகளில் 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடைபெற்ற குரூப் 4 தேர்வினை 84.28 சதவீதம் பேர் எழுதி உள்ளனர். ஒரு பணியிடத்திற்கு சுமார் 255 பேர் போட்டித் தேர்வினை எழுதியுள்ளனர்.

குரூப் 4
குரூப் 4

சென்னை: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில், 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி நிலையில், காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெற்றது. பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடைபெற்ற இத்தேர்வில், பகுதி ஒன்றில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வு 100 கேள்விகள் 150 மதிப்பெண்கள்.

பகுதி இரண்டில் பொது அறிவில் 75 கேள்விகளும்; மனக்கணக்கு மற்றும் திறன் அறிதல் பகுதியில் 25 கேள்விகளும் என 100 கேள்விகள் 150 மதிப்பெண்கள் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 316 வட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்தத் தேர்வினை 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்களும், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண் தேர்வுகளும், 131 திருநங்கைகளும், 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 கைம்பெண், முன்னாள் ராணுவத்தினர் 6,635 பேர் எழுத பதிவு செய்தனர்.

தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறாத வகையில் கண்காணிக்கப்பட்டது. சிறப்பு பிரிவினருக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டது.

குரூப் 4 தேர்வினை எழுதுவற்கு விண்ணப்பம் செய்திருந்த 22,02,942 தேர்வர்களில் 84.28 சதவீதம் பேர் தேர்வினை எழுதியுள்ளனர். அதாவது 18 லட்சத்து 56 ஆயிரத்து 640 பேர் தேர்வினை எழுதி இருக்கின்றனர். ஒரு பணியிடத்திற்கு சுமார் 255 பேர் தேர்வினை எழுதி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம் குறித்து கேள்வி - சு. வெங்கடேசன் எம்.பி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.