பொறியியல் படிப்பில் சேர 1,17,562 மாணவர்கள் பதிவு

author img

By

Published : Aug 5, 2021, 10:46 PM IST

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 1,17,562 மாணவர்கள் பதிவு
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 1,17,562 மாணவர்கள் பதிவு ()

பொறியியல் படிப்பில் சேர 10 நாள்களில் ஒரு லட்சத்து,17 ஆயிரத்து 562 மாணவர்கள் இன்று (ஆக. 5) மாலை 5.30 மணிவரை ஆன்லைன் பதிவு செய்துள்ளனர்.

சென்னை: பிஇ, பிடெக் பொறியியில் படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை www.tneaonline.org www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பொறியியல் படிப்பில் சேர 10 நாள்களில் மாலை 5.30 மணிவரையில் பொறியியல் கலந்தாய்விற்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 611 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் கலந்தாய்வில் பங்கேற்க 86 ஆயிரத்து 789 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 67 ஆயிரத்து 898 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: '12ஆம் வகுப்பு துணைத் தேர்வு நாளை தொடக்கம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.