ETV Bharat / business

தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமா?

author img

By

Published : Jun 14, 2020, 7:48 PM IST

நாளுக்கு நாள் குறைந்து வரும் ஃபிக்ஸ்டு டெபாசிட்களின் வட்டி விகிதம், நிலையற்ற பங்குச் சந்தையால் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். நீண்டகால முதலீட்டாளர்கள் நேரத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. ஏனென்றால், நல்ல நேரத்தைத் தேடும் வேலையில் பல வாய்ப்புகளை அவர்கள் இழக்கலாம்.

covid gold
covid gold

கடந்த ஜனவரி 1ஆம் தேதி, 47,110 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 24 கேரட் தங்கம், 18 விழுக்காடு உயர்ந்து ஜூன் 12ஆம் தேதி விற்கப்பட்டது.

தங்கத்தை அதிகம் நேசிக்கும் இந்திய மக்களுக்கு இந்த விலை ஏற்றம் பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

நாளுக்கு நாள் குறைந்து வரும் ஃபிக்ஸ்டு டெபாசிட்களின் வட்டி விகிதம், நிலையற்ற பங்குச் சந்தையால் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கோவிட்-19 ஊரடங்கு காரணமாக நேரில் சென்று தங்கம் வாங்குவது குறைந்துள்ள சூழலில், இணையம் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது அமோகமாக நடந்து வருகிறது.

இந்தியர்கள் ஏன் தங்கத்தை விரும்புகின்றனர்?

  • தங்கத்தை உடனடியாக பணமாக்க முடியும்
  • தங்க நகைகள் மீதான மோகம்
  • வளங்குன்றா வளர்ச்சி

பேரிடரில் மின்னும் பொன்:

பேரிடர் காலங்களில் தங்கத்துக்கு எப்போதுமே மவுசு உண்டு. பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஒரு வரப்பிரசாதம்.

சீட்டுக்கட்டாக பொருளாதாரம் சரிந்து வரும் வேளையில், தங்கத்தின் மதிப்பு மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்வதை வைத்து, இதனை நாம் புரிந்துகொள்ளலாம்.

கரோனா வைரஸின் தாக்கம், அளவுக்கு மீறிய பொருளாதாரப் பேரிடரை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறிவரும் வேளையில், தங்கத்தின் மதிப்பைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற அழைப்புகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

தங்கம் வாங்க இது சரியான நேரமா?

முதலீடு என்று வந்துவிட்டால் நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதுக்கு எல்லாம் இடமில்லை. இது தங்கத்துக்கும் பொருந்தும்.

நீண்ட கால முதலீட்டாளர் நல்ல நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. அப்படி காத்துக்கொண்டே இருந்தால், பல நல்ல வாய்ப்புகள் கை நழுவிச் செல்லலாம்.

உடனடியாக, வருமானம் எதிர்பார்க்கும் எண்ணத்தை நாம் கைவிட வேண்டும்.

தங்கத்தில் முதலீடு செய்யும் போது, அது சமீபத்தில் எவ்வாறு வளர்ச்சி கண்டு வந்தது என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக, அது வருங்காலத்தில் எந்த மாதிரியான வளர்ச்சியை அடையும் எனக் கணித்து மிகவும் கவனமாக வாங்க வேண்டும்.

கடந்த 50 ஆண்டுகளில் தங்கம் விலை எவ்வாறு வளர்ச்சி கண்டு வருகிறது என்பதைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிந்துவிடும். ஒரு ஆண்டுக்குத் தங்கம் 11.3 விழுக்காடு வளர்ச்சி அடைகிறது.

தங்கத்தில் எப்படி முதலீடு செய்வது?

  • மியூச்சுவல் ஃபண்டில் செய்வது போன்று குறிப்பிட்ட காலத்தில், தங்கத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை வகுத்து வைத்துக்கொள்ளுதல்.
  • தங்கத்தின் விலை, வாங்கிய காலத்திலிருந்து தற்போது வரை எவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • 5-15 வரை, தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். கஷ்ட காலத்தில் அது கைகொடுக்கும். பெருந்தரம் வீழும் போது, உங்களுக்கு ஏற்படும் இழப்புகளைத் தங்கம் ஈடுகட்டும்.

எது செய்வதாக இருந்தாலும் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு, சரியான வியூகம் அமைத்து, அதன்படி தெளிவாக முடிவெடுங்கள்.

இந்தக் கட்டுரையை எழுதியது சங்கிராஸ் சந்தா. இவர் எஸ்இபிஐ-யால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகர் ஆவார்.

இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கும் ஈடிவி பாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதையும் படிங்க : எகிறும் எண்ணெய் விலை : எட்டே நாளில் ஐந்து ரூபாய் உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.