ETV Bharat / business

'கரோனாவை மீறி பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் இலக்கை எட்டும்' - ராம் மாதவ் உறுதி

author img

By

Published : Jun 4, 2020, 4:06 PM IST

Ram Madhav
Ram Madhav

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த பிரத்யேக நேர்காணலின் தமிழாக்கம் இதோ...

கரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக நீங்கள் பார்ப்பது என்ன?

ராம் மாதவ்: மோடியின் இரண்டாவது ஆட்சியில் பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன. விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெண்கள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக மோடி அரசு பல சமூகநலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இஸ்லாமியப் பெண்களுக்கான முத்தலாக் சட்டத்திருத்தம், காஷ்மீரின் சிறப்புத் தகுதி நீக்கம் போன்ற பல முக்கியமான முடிவுகளை மோடி அரசு எடுத்துள்ளது. தேச ஒற்றுமையைக் கருத்தில்கொண்டு, அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கு குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

தற்போதை சூழலில் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் இலக்கை அடைய முடியுமா?

ராம் மாதவ்: நமது அரசு அந்த இலக்கை நோக்கித்தான் சென்றுகொண்டுள்ளது. ஒரே வேறுபாடு என்னவென்றால், கரோனா வைரசின் காரணமாக இந்தப் பயணம் மெதுவாக உள்ளது. ஆனால், இந்தியாவுக்கு மட்டுமல்ல, மொத்த உலகிற்கும் இதே நிலைமைதான் என்பதே உண்மை. 2025ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் இலக்கை அடைய முடியுமா என்பது மக்களுக்குச் சந்தேகம் ஏற்படுவது இயல்பானது.

ஆனால், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலரைத் தாண்டி, 10 லட்சம் கோடி டாலர் இலக்கையும் எட்டும் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். இதற்கிடையே தடுமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், அரசு தனது திட்டத்தையும் கொள்கைகளையும் விரைவுபடுத்தி வரும் காலாண்டில் ஏற்படும் பாதிப்பைத் தடுத்து நிறுத்தம் என நம்புகிறேன்.

சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர தற்சார்பு இந்தியா என்ற ஒரு பொன்னான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா?

ராம் மாதவ்: மோடி அரசு தனது முதல் பதவிக்காலத்தில் இருந்தே தற்சார்பு என்ற இலக்கை அடைய, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது. இந்தத் தன்னம்பிக்கையை உறுதிசெய்யவே ஸ்டார்ட்-அப் இந்தியா, ஸ்டான்ட்-அப் இந்தியா போன்ற திட்டங்களை மோடி அரசு கொண்டுவந்தது. இப்போது நாம் பெருந்தொற்றை எதிர்கொண்டுள்ளோம். இந்தச் சூழலில்தான் நாம் முன்னேற்றம் காணக்கூடிய பல பகுதிகள் உள்ளன என்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

தற்சார்பு என்பது நாம் உலகின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து தனித்திருப்போம் என்று அர்த்தமல்ல, இதன் பொருள் நாம் சுயமாக எழுந்து நிற்போம், சுதேசியம் என்பதைத் தளமாகக் கொண்டு நாம் இந்தியப் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலர் என்ற மதிப்பிற்குக் கொண்டு செல்வோம் என நம்பிக்கையுள்ளது.

ராம் மாதவ் முழு நேர்காணல்

இதையும் படிங்க: அரசின் அறிவிப்புகளால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்- அனுராக் தாக்கூர் நேர்காணல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.