கண்டுபிடிப்பாளர்களுக்கு நற்செய்தி: கல்வி நிறுவனங்களுக்கு 80% காப்புரிமை கட்டணத்தில் விலக்கு

author img

By

Published : Sep 23, 2021, 11:02 PM IST

Govt. reduces patent fees for educational institutions by 80

கல்வி நிறுவனங்களுக்கான காப்புரிமைகளை தாக்கல் செய்வதற்கான கட்டணத்தை ஒன்றிய அரசு 80 விழுக்காடு குறைத்துள்ளது. இது புதிய கண்டுபிடிப்புகள் உருவாவதற்கு கூடுதல் பலமாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி: கல்வி நிறுவனங்கள் வாயிலாகத் தாக்கல் செய்யும் காப்புரிமைக் கட்டணத்தை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

தற்போது, காப்புரிமைத் தொகையில் 80 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த நோக்கத்திற்காக புதிய காப்புரிமை (திருத்தம்) விதிகள் 2021 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என தொழில் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொதுவாக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கும் போது, கண்டுபிடிப்பாளர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்ய வேண்டும் மற்றும் இந்த நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களுக்கான காப்புரிமை கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது கண்டுபிடிப்பாளர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது.

எனவே, அதிக எண்ணிக்கையில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், காப்புரிமை கட்டணத்தை கணிசமாகக் குறைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'வான்வழியாகவும் இனி மருந்துகளை பெறலாம்... தெலங்கானாவில் புதிய முன்னெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.