ETV Bharat / business

மீடியாடெக் பிராசஸரை மான்ஸ்டராக மாற்ற வரும் டைமன்சிட்டி 820!

author img

By

Published : May 20, 2020, 2:00 PM IST

மீடியாடெக்
மீடியாடெக்

டெல்லி: மீடியாடெக் பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கான புதிய சிப்செட்டான டைமன்சிட்டி 820ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கைப்பேசி துறையில் புதிய ஸ்மார்ட்போன்கள் மூலம் பயனர்களை கவர்வதற்கு பல முன்னனி நிறுவனங்கள் போட்டி போட்டு ஸ்மார்ட்போன்களை களமிறக்குகின்றன. பயனர்கள் ஆன்லைன் கேமில் ஆர்வமாக உள்ள காரணத்தினால், கிராபிக்ஸ் கேம் விளையாடினால் செல்போன் வெப்பம் அடைவது, பேட்டரி சார்ஜ் குறைவது, மொபைல் ஹேங் ஆகுவது போன்ற பிரச்னை வரக்கூடாது என எதிர்ப்பார்க்கின்றனர். அதன்படி, மீடியாடெக் பிராசஸர் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு அதீநவின செயல்திறன் கொண்ட புதிய சிப் செட்டான டைமன்சிட்டி 820ஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீடியாடெக்கின் வயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ் பிசினஸ் யூனிட்டின் பொது மேலாளர் வெளியிட்ட அறிக்கையில், "ஆக்டா-கோர் சிபியு 2.6GHz உடன் நான்கு உயர் செயல்திறன் ஆர்ம் கார்டெக்ஸ்-ஏ 76 கோர்சை (Arm Cortex-A76 cores) இணைத்து டைமன்சிட்டி 820 சிப் செட் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அசத்தலான செயற்கை நுண்ணறிவு (AI), கேமிங், போட்டோகிராப் ஆகியவற்றிலும் சிறந்த செயல்திறன் கொண்டுள்ளதால் சகப் போட்டியாளர்களின் சிப்செட் திறனை விட அதீத சக்தியுடன் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: வேலையின்மை, பொருளாதார மந்தநிலை நீண்டகாலம் நீடிக்கும்: உலக பொருளாதார மன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.