ETV Bharat / business

ரூ.75,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி இலக்கு: வால்மார்ட் அறிவிப்பு

author img

By

Published : Dec 11, 2020, 1:50 AM IST

2027ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் ரூ.75,000 கோடி பங்களிப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Walmart
Walmart

உலகின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள வணிக நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வால்மார்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வால்மார்ட் நிறுவனத்தின் தடத்தை இந்தியாவில் அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, உணவு, மருந்தகம், சுகாதாரம் போன்ற துறைகளில் இந்தியாவை ஏற்றுமதி மையாமாக மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

உலக வர்த்தக சங்கிலியில் முக்கிய அங்கமாக இந்தியா மாறும் என நம்பிக்கைக் கொண்டுள்ளோம். எனவே, 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் ரூ.75,000 கோடி பங்களிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

வால்மார்ட் நிறுவனத்தின் முதல் அலுவலகம் பெங்களூரில் 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் முக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தற்போதைய மதிப்பில் சுமார் ரூ.25,000 கோடி வர்த்தகம் வால்மார்ட் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. வால்மார்ட் இந்தியாவின் கிளை நிறுவனமாக வால்மார்ட் விரித்தி, பிளிப்கார்ட் சாம்ராட் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

இதையும் படிங்க: ஃபோர்டு வாகனங்களின் விலை ஜனவரி முதல் உயர்கிறது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.