ETV Bharat / business

இந்தியாவில் பணி அமர்த்துதல் விழுக்காடு அதிகரிப்பு!

author img

By

Published : Nov 9, 2020, 11:26 PM IST

டெல்லி : கடந்த அக்டோபர் மாதம் ஐடி-சாப்ட்வேர் மற்றும் சேவைத்துறையில், ஊழியர்கள் நியமனம் 7 விழுக்காடு உயர்ந்துள்ளதாக, நாக்குரி ஜாப் ஸ்பீக்ஸ் இன்டெக்ஸ் (Naukri JobSpeak Index) தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பணி அமர்த்துதல் விழுக்காடு
இந்தியாவில் பணி அமர்த்துதல் விழுக்காடு

கரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, நெருக்கடியில் சிக்கியுள்ள பெரு நிறுவனங்கள், அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேபோல் சரிவைச் சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பல்வேறு தொழில் துறைகளில் கடந்த அக்டோபர் மாதம் பணி அமர்த்துதல் விழுக்காடு கணிசமாக உயர்ந்து வருவதாக, நாக்குரி ஜாப் ஸ்பீக்ஸ் இன்டெக்ஸ் (Naukri JobSpeak Index) அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதம் ஐடி, சேவைத்துறை, ரீடெய்ல், சுற்றுலாத்துறை என அனைத்து துறைகளையும் ஒன்றாக கணக்கிடுகையில் வேலை ஆட்கள் நியமிப்பு விகிதம் 17 விழுக்காடாக குறைந்துள்ளது. ஆனால், கரோனா பரவல் காரணமாக, அனைவரும் டிஜிட்டல் முறைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், ஐடி, சேவைத்துறையில் மட்டும் கடந்த மாதம் ஊழியர்கள் நியமிப்பு விகிதம் 7 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அதேபோல, நுகர்வோர் சாதனத் தயாரிப்புத் துறை (4 விழுக்காடு), விளம்பரத்துறை ( 14 விழுக்காடு) உள்ளிட்ட துறைகளில் பணி அமர்த்துதல் நடவடிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல பிபிஓ (BPO) துறை (5 விழுக்காடு) பிஎஃப்எஸ்ஐ (BFSI) (4 விழுக்காடு) போன்ற துறைகளில், புதிய ஊழியர்கள் நியமனம் குறைந்துள்ளது.

மேலும் தொலைக்காட்சி மற்றும் பட தயாரிப்பு துறை ( 17 விழுக்காடு), கிராப்பிக் டிசைன்ஸ் ( 17 விழுக்காடு), நிதித்துறை (7 விழுக்காடு), தொழில் மேம்பாட்டுத்துறை ( 6 விழுக்காடு) உள்ளிட்ட துறைகளில், வேலை ஆட்கள் நியமிப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

இந்த பணி அமர்த்துதல் நடவடிக்கை, பெரு நகங்களான பெங்களூருவில் 8 விழுக்காடு, சென்னையில் 6 விழுக்காடு, கொச்சியில் 9 விழுக்காடு, கோவையில் 5 விழுக்காடு, கொல்கத்தாவில் 4 விழுக்காடு, அகமதாபாத்தில் 6 விழுக்காடு என கடந்த அக்டேபார் மாதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டேபார் மாதத்தை விட, நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் வேதிப்பொருட்கள், மருந்து துறை, சுகாதாரப் பராமரிப்புத்துறை ஆகியவற்றில், அதிக எண்ணிகையிலான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோல கடந்த ஆண்டு அக்டோபரை காட்டிலும், நடப்பு ஆண்டு அதே மாதத்தில், கரோனா தொற்று காரணமாக, சுற்றுலாத்துறை(58 விழுக்காடு), டீரெய்ல் (37 விழுக்காடு) ஆகிய துறைகளில் வேலை ஆட்கள் நியமிப்பு பெரும் தாக்கத்தை கண்டுள்ளது.

அதே நேரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை விட, நடப்பு ஆண்டு அதே மாதம் இன்சுரென்ஸ் (10 விழுக்காடு) கொள்முதல் மற்றும் தளவாடங்கள் ( 6 விழுக்காடு) என ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக 6 மாதங்களுக்கு மேலாக மெட்ரோ ரயில் சேவை முடங்கி இருந்த காரணத்தால், அத்துறையில் பணி அமர்த்துதல் குறைந்துள்ளது. குறிப்பாக பணி அமர்த்துதல் நடவடிக்கை மெட்ரோ நகரங்களான மும்பையில் 28 விழுக்காடும், ஹைதராபாத்தில் 26 விழுக்காடும், சென்னையில் 24 விழுக்காடும் குறைந்துள்ளது.

அனைத்து துறைகளையும் எடுத்துக்கொண்டால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும், நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் வேலையாட்கள் நியமிப்பு 21 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது. " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாறுமாறாக உயரும் இந்திய பங்குச்சந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.