ETV Bharat / business

ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு குறித்து நிதியமைச்சகம் ஆலோசனை!

author img

By

Published : Jun 20, 2020, 3:53 AM IST

டெல்லி: கரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் களைவதற்கான முயற்சிகளை மத்திய அரசு உற்று கவனிப்பதாகவும், பெருநிறுவனங்கள், நுகர்வோருக்கு ரெப்போ விகிதத்தைக் குறைப்பது குறித்து ஆலோசனை செய்துவருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

nirmala sitharaman
nirmala sitharaman

”இதனால் முடங்கிய பொருளாதாரத்துக்கு ஒரு உந்துதல் அளிக்க முடியும். நாட்டில் செல்வத்தைப் பெருக்குபவர்களால் நிறைய வேலைவாய்ப்புகள் வளரும். சமூகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கும் அவர்களின் பங்கு அளப்பரியது. எனவே அவர்களின் முக்கியத்துவத்தை எப்போதும் அரசாங்கம் அங்கீகரிக்கும்” என காணொலிக் காட்சி வாயிலாக பி.ஹெச்.டி. சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிறு,குறு நிறூவனங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி எப்போதும் அறிந்துவைத்திருக்கிறார் என்றும், வங்கிகளுடன் கலந்தாலோசித்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்துவருவதாகவும் கூறினார்.

மேலும், குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களின் அடிப்படையில், வங்கிகள் பயனாளிகளுக்கு சலுகைகள் வழங்குகின்றனவா என்பதனை அரசு ஆராய்ந்துவருவதாகவும், நாட்டின் எந்த மூலைகளில் இருந்தாலும், அரசின் உதவிகள் அவர்களுக்குக் கிடைக்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மே மாதம், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் 40 அடிப்படை புள்ளிகளைக் குறைத்தது. அதுவே 4 விழுக்காடாக ரெப்போ விகிதம் குறைந்தது. இதுவே வரலாற்றில் அரசு குறைக்கும் ரெப்போ விகிதத்தின் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.