ETV Bharat / business

'இ-ருபி' என்றால் என்ன... எப்படி பயன்படுத்தலாம்?

author img

By

Published : Aug 2, 2021, 9:35 PM IST

Updated : Aug 2, 2021, 9:42 PM IST

erupi, இ ருபி
erupi இ ருபி

இணையவழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் பெற்றுக் கொள்ளும் 'இ-ருபி' வசதியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லி: 'இ-ருபி' என்ற ரசீது முறை பணப் பரிவர்த்தனை வசதியை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, இந்தியா எவ்வாறு மக்களை ஒன்றிணைக்கிறது மற்றும் நாடு மேம்பாட்டை நோக்கிச் செல்கிறது என்பதற்கு இ-ருபி உதாரணம் என பிரதமர் தெரிவித்தார்.

பங்கு வெளியீட்டிற்கு தயாராகும் பாலிசி பஜார் - சுமார் ரூ.6,000 கோடி திரட்ட முடிவு

இ-ருபி க்யூஆர் குறியீடு அல்லது குறுந்தகவல் அடிப்படையிலான மின்னணு ரசீதாகும்.

சொடெக்ஸோ கூப்பன்களைப் போன்ற செயல்பாடுகளை கொண்டிருக்கும் இ-ருபி கூப்பன்களை, நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தேசிய கொடுப்பனவு (National Payments Corporation of India (NPCI)) உருவாக்கியுள்ளது.

இ-ருபி வசதியின் நன்மைகள்

  • பயனாளர்கள் முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட்டால், அவர்களது மொபைலுக்கு கூப்பன்கள் அனுப்பப்படும்.
  • அதற்கு முன்பாக பயனாளர்களின் மொபைல் எண், அடையாளம் போன்றவற்றை அரசு சரிபார்க்கும்.
  • இதனை பயன்படுத்த மொபைல் பேங்கிங், பணப் பரிவர்த்தனை செயலி ஆகியவைத் தேவையில்லை என்பதால் சாதாரண கைபேசி வைத்திருப்பவர்கள் கூட இந்த சேவையை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
  • கூப்பன் விவரங்கள் அடங்கிய குறுந்தகவலை சேவை பெறும் இடத்தில் காண்பித்தால், சேவைக்கு ஏற்ப பணப் பிடித்தம் செய்துகொள்ளப்படும்.

எஸ்பிஐ, கனரா வங்கி, பரோடா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட், ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் ‘இ-ருபி’ வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தில் இணைந்துள்ளன.

Last Updated :Aug 2, 2021, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.