ETV Bharat / business

2025க்குள் 60 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் சாலையில் ஓடும் - ஏத்தர் உறுதி

author img

By

Published : Jun 12, 2021, 10:44 PM IST

2025 ஆம் ஆண்டுக்குள் 60 லட்சம் மின்சார வாகனங்கள் சாலையில் ஓடும் என ஏத்தர் எனர்ஜி நிறுவனர் தருன் மேத்தா தெரிவித்துள்ளார்.

ஏத்தர் எனர்ஜி
ஏத்தர் எனர்ஜி

சென்னை: இந்தியாவைச் சேர்ந்த மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் நாட்டில் முன்ணனி மின்சார வாகன விற்பனை நிறுவனமாக உருவெடுத்து வருகிறது.

தற்போது, ஒன்றிய அரசு நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் ஃபேம் (FAME India scheme - Faster Adoption and Manufacturing of Strong Hybrid and Electric Vehicles in India) நடைமுறையை மாற்றியமைத்துள்ளது.

இதுகுறித்து ஏத்தர் எனர்ஜி இணை நிறுவனர் தருன் மேத்தா கருத்து தெரிவிக்கும்போது, "புதிய ஃபேம் நடைமுறை மூலம் மின்சார வாகனங்களுக்கு கிலோவாட் திறனுக்கு ஏற்ப 50 விழுக்காடு வரை மானியம் கொடுக்க முடிவு செய்துள்ளது மிக முக்கிய நடவடிக்கை. இது வரவேற்கதக்கது.

பலே கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் டெஸ்லா மாடல் எஸ் பிளைட்

நாட்டில் கரோனா தொற்றுக்கு மத்தியில் மின்சார வாகன விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் மானியம் காரணமாக இருசக்கர வாகன சந்தையில் மின்சார வாகனங்களின் விற்பனை மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும்.

2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 60 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் இயங்கும். ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அடுத்த 6 மாதங்களில் 30 நகரங்களுக்கு எங்களது கிளைகளை விரிவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

தற்போதைய மானிய அறிவிப்பால் இது ஏத்தர் இருசக்கர வாகன விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் இருசக்கர மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் அரசின் நடவடிக்கைகளால், இந்தியா உலகளவில் இருசக்கர வாகன உற்பத்தியின் மையமாக மாறும்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.