ETV Bharat / briefs

அரியலூரில் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு - ஒரே நாளில் 26 பேர் பாதிப்பு!

அரியலூர்: மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 26 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

அரியலூரில் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு - ஒரே நாளில் 26 பேருக்கு உறுதி!

author img

By

Published : Jul 22, 2020, 10:47 PM IST

கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 710 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், 4 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் 3 பேர் உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (ஜூலை22) ஒரே நாளில் கரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

26 பேருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் அரியலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கோவிட்-19 பாதிப்பிற்குள்ளான அலுவலர்கள் பணியாற்றிவந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், அவர்களது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிப் பகுதிகளைக் கடந்து தற்போது கிராமப்புறங்களிலும் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதாக அறிய முடிகிறது.

கோவிட்-19 பாதிப்பின் காரணமாக கிராமங்களில் உயிரிழப்புகள் அதிகரித்தது அரியலூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.