ETV Bharat / briefs

கூகுள் பே செயலிக்கு போட்டியாக மி-பே!

author img

By

Published : Mar 20, 2019, 10:46 AM IST

மி பே

சீன நிறுவனமான சியோமி , நேற்று சியோமி மி-பே சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சியோமி மி-பே சேவையை, இந்நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் பே சேவைக்குப் போட்டியாக சியோமி நிறுவனம் தற்பொழுது ’சியோமி மி-பே’ சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்தப் பயனரின் அலைபேசி, தொடர்பு எண், குறுந்தகவல் போன்ற சேவைகளுக்கான அனுமதியைப் பயனர்கள் வழங்கவேண்டியது கட்டாயம்.

யு.பி.ஐ. முகவரி

சியோமி மி-பே சேவையைப் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் அவர்களின் யு.பி.ஐ. முகவரி, வங்கி கணக்கு விவரங்களை மி-பே சேவையுடன் இணைக்க வேண்டும். பின் மி-பே சேவையைப் பயன்படுத்தி உங்கள் கணக்கிலிருந்து நேரடியாகப் பணம் அனுப்ப முடியுமென்று சியோமி தெரிவித்துள்ளது.

Xiomi
மி பே

சியோமி மி-பே சேவை செயலி

சியோமி மி-பே சேவை செயலி MIUI தளத்தின் கீழ் செயலி வால்ட்டில் (vault) ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி மி-பே பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தும் முறை

சியோமி மி-பே சேவையில் வங்கி பணப் பரிவர்த்தனை, அலைபேசிக் கட்டணம், ரீசார்ஜ், டி.டி.ஹெச். ரீசார்ஜ், மின்சேவை கட்டணம் என மேம்பட்ட பல்வேறு சேவைகளும் இந்த செயலி பயனர்களுக்கு இலவசமாகத் தருகிறது.

Xiomi
மி பே

தகவல் பாதுகாப்பு

சியோமி மி-பே சேவையைப் பயன்படுத்தும் அனைத்தும் பயனர்களின் அனைத்து விவரங்களும் உள்நாட்டு தகவல் மாற்றிலேயே (Servers) சேமிக்கப்படும் என்றும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரத்தின் இறுதிக்குள் அனைவருக்கும் சியோமி மி-பே சேவை கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Xiomi
மி பே

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.