ETV Bharat / briefs

காதலித்து திருமணம்: பெண் வீட்டாருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதிப்பு

author img

By

Published : Jul 2, 2020, 12:49 PM IST

காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய  பெண்களின் குடும்பத்தினருக்கு  18 ஆயிரம் ரூபாய் அபராதம் - நாட்டாமை தீர்ப்பு
காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய பெண்களின் குடும்பத்தினருக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம் - நாட்டாமை தீர்ப்பு

நாகை: காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த பெண்ணின் வீட்டாருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்ததை தட்டிக் கேட்டதால், ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டதாக கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் அன்னப்பன்பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் தெருவில் வசித்த இரண்டு பெண்கள் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இது தொடர்பாக கடந்த 20ஆம் தேதி கிராம கூட்டம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தில், கிராம நாட்டாமை மற்றும் பஞ்சாயத்தார்கள் மகாலிங்கம், நடராஜன், சத்யராஜ், ஜெயராமன், ராயல் குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோர் இரு பெண்களின் பெற்றோர்களுக்கும் தலா ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அகோரம் என்பவர், காதல் திருமணம் செய்த பெண்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும், மாறாக அவர்களது பெற்றோர்களுக்கு அபராதம் விதிப்பது சரியில்ல” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அக்கிராமத்தை சேர்ந்த சிலர், அகோரம் அவரது சகோதரர் ஜெய்சங்கரின் மகன் பிரதீப் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அகோரம், பிரதீப் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இது பற்றி தகவலறிந்த செம்பனார்கோவில் காவல்நிலைய காவலர்கள் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், அன்றிரவே அகோரம், ஜெய்சங்கர் மூத்த சகோதரர் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேரின் குடும்பத்தினரையும் ஊரைவிட்டு விலக்கி வைத்திருப்பதாக ஓடும்பிள்ளை மூலம் தகவல் தெரிவித்ததோடு அவர்களிடம் பழகுவதையும் நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில், “ஊரை விட்டு விலக்கி வைத்த நாட்டாமை மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் அளித்தனர்.

இதையும் படிங்க: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நக்சல் ஊடுருவல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.