'ஆறு மாதத்தில் இரண்டு லாக்கப் மரணங்கள்' - ஹென்றி டிபேன் குற்றச்சாட்டு

author img

By

Published : Jul 2, 2019, 10:41 PM IST

மதுரை: "மதுரையில் கடந்த ஆறு மாதத்திற்குள் இரண்டு லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. இதற்கு உரிய நியாயத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் வழங்க வேண்டும்" என்று, மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘கடந்த 22ஆம் தேதி கரிமேடு அருகே ஆட்டோ நிலையத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மணிகண்டன் என்பவர், மதியம் 3.00 மணிக்குக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சாதாரண 75ஆவது பிரிவில் வழக்குப் பதிவு செய்து 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார். மறுபடியும் ஆட்டோ நிலையம் செல்லும் அவரை மீண்டும் காவல் நிலையம் அழைத்துச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

தாக்கப்பட்டுள்ள மணிகண்டனைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோரை, வீட்டிற்கு அனுப்பி விட்டு, மறுபடியும் காலை வரச் சொல்லி, காய்ச்சல் காரணமாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் மணிகண்டன் இருப்பதாகச் சொல்லி, பார்க்கச் சொல்கிறார்கள். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த 300-க்கும் மேற்பட்ட காவலர்களை மீறி தங்கள் மகனைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இறந்த நிலையில் தான் மகனைப் பார்க்கிறார்கள்.

பிணத்தை வாங்க மறுத்து, பெற்றோர்கள் கதற, இரவு மருத்துவமனை டீனோடு கை கோர்த்துக் கொண்டு, இரவோடு இரவாக உடற்கூறாய்வு நடத்தி, பழங்காநத்தத்தில் உள்ள வீட்டிற்குக் கூட உடலைக் கொண்டு செல்ல விடாமல், தத்தனேரி சுடுகாட்டிற்கு காவலர்கள் பாதுகாப்போடு சென்று கொண்டு உள்ளார்கள். ஆனால் காவல் நிலைய மரணத்தைத் தடுக்க வேண்டிய மேல் அலுவலர்கள், இதனை ஊக்குவிக்கிறார்கள். கீழுள்ள அலுவலர்கள் உதவி புரிகிறார்கள்.

செய்தியாளர்களுக்கு மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் பேட்டியளித்தபோது

இலவச சட்ட உதவி ஆணைக் குழு இது போன்ற வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். 24 மணி நேரம் ஒரு இளம் வழக்கறிஞரை, பயிற்சி பெற்ற வழக்கறிஞரை முழு நேர பணியில் அமர்த்த வேண்டும். கரிமேடு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அனைத்து கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் மதுரை ஆணையாளரை நம்பத் தயாரில்லை. ஐ.ஜி. ரேங்கில் இருக்கும் ஆணையாளர், துணை ஆணையாளர் அனைவரின் மீதும் சிபிசிஐடி விசாரணைக் கேட்டு டிஜிபியிடம் மனு அளிக்க உள்ளோம். இதை மக்கள் கண்காணிப்பகம் சும்மா விடாது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் இவ்வழக்கு குறித்தும், காவல் நிலைய மரணங்கள் குறித்தும் பேரவையில் விவாதிக்க வேண்டும்.

காவல் நிலைய அலுவலர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள் என்பதனை உயர் அலுவலர்கள் அவ்வப்போது உணர்த்த வேண்டும். ஒரு உயிரை எடுப்பதற்குக் காவல் நிலைய அலுவலர்களுக்கு உரிமை இல்லை’ எனக் கூறியிருக்கிறார்.

Intro:கடந்த ஆறு மாதத்திற்குள் மதுரையில் இரண்டு காவல்நிலைய மரணங்கள் - ஹென்றி டிபேன் குற்றச்சாட்டு

மதுரையில் கடந்த ஆறு மாதத்திற்குள் இரண்டு காவல்நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு உரிய நியாயத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் வழங்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் பேட்டிBody:கடந்த ஆறு மாதத்திற்குள் மதுரையில் இரண்டு காவல்நிலைய மரணங்கள் - ஹென்றி டிபேன் குற்றச்சாட்டு

மதுரையில் கடந்த ஆறு மாதத்திற்குள் இரண்டு காவல்நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு உரிய நியாயத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் வழங்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் பேட்டி

கடந்த 22ந் தேதி கரிமேடு காவல் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் மதியம் 3.00 மணிக்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார் மணிகண்டன்.

சாதாரண 75ஆவது பிரிவில் வழக்குப் பதிவு செய்து 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

மறுபடியும் ஆட்டோ நிலையம் செல்லும் அவரை மீண்டும் காவல் நிலையம் அழைத்துச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இரவு 1.00 மணிக்கு பெற்றோரை அழைத்து. தாக்கப்பட்டுள்ள மணிகண்டனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோரை வீட்டிற்கு அனுப்பி விட்டு மறுபடியும் காலையில் வீட்டில் இருந்து வரச் சொல்லி, காய்ச்சல் காரணமாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனை சென்று பார்க்கச் சொல்கிறார்கள்.

அங்கு பாதுகாப்பிற்கு 300-க்கும் மேற்பட்ட போலீசாரை மீறி தங்கள் மகனைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இறந்த நிலையில் தான் மகனைப் பார்க்கிறார்கள். பிணத்தை வாங்க மறுக்கும் பெற்றோர்கள் கதற இரவு மருத்துவமனை டீனோடு கை கோர்த்துக் கொண்டு, இரவு 11.00 மணிக்கு உடற்கூறு பரிசோதனை நடத்தி,

பழங்காநத்தத்தில் உள்ள வீட்டிற்கு கூட உடலைக் கொண்டு செல்ல விடாமல், தத்தனேரி சுடுகாட்டிற்கு போலீஸ் பாதுகாப்போடு சென்று கொண்டு உள்ளார்கள்.

ஆனால் காவல் நிலைய மரணத்தை தடுக்க வேண்டிய மேல் அதிகாரிகள், இதனை ஊக்குவிக்கிறார்கள். கீழுள்ள அதிகாரிகளுக்கு உதவி புரிகிறார்கள்.

இலவச சட்ட உதவி ஆணைக் குழு இது போன்ற வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்.

24 மணி நேரம் ஒரு இளம் வழக்கறிஞரை, பயிற்சிப் பெற்ற வழக்கறிஞரை முழு நேர பணியில் duty counsel ஆக அமர்த்த வேண்டும்.

கரிமேடு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அனைத்து CCTV Footage ஐயும் பாதுகாக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் மதுரை ஆணையாளரை நம்பத் தயாரில்லை.

ஐ.ஜி. ரேங்கில் இருக்கும் ஆணையாளர், துணை ஆணையாளர் அனைவரின் மீதும் சிபிசிஐடி விசாரணைக் கேட்டு டிஜிபியிடம் மனு அளிக்க உள்ளோம்.

இந்த விஷயத்தை மக்கள் கண்காணிப்பகம் சும்மா விடாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வழக்கு குறித்தும், காவல் நிலைய மரணங்கள் குறித்தும் சட்டசபையில் விவாதிக்க வேண்டும்.

காவல் நிலைய அதிகாரிகளும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள் என்பதனை உயர் அதிகாரிகள் அவ்வப்போது உணர்த்த வேண்டும். ஒரு உயிரை எடுப்பதற்கு காவல் நிலைய அதிகாரிகளுக்கு உரிமை இல்லை

என மக்கள் கண்காணிப்பக வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேட்டி.

மேலும் அவர், மதுரையில் உள்ள உளவுப் பிரிவு போலீசார் திறமையானவர்கள். அவர்கள் தரும் உண்மைத் தகவல்களை மறைத்து காவல் ஆணையாளர் செயல்படுகிறார்.

இந்நிலையில் பொதுமக்கள் எந்த ஒரு புகார் குறித்தும், தன்னிடம் ரகசியமாகத் தெரிவிக்க ஒரு வாட்ஸ் அப் நம்பரை அறிவித்து நாடகமாடுகிறார் மதுரை காவல் ஆணையாளர் .

கீழே உள்ள அதிகாரிகளுக்கு தவறான உத்தரவுகளைத் தருவதை மேல் அதிகாரிகள் கைவிட வேண்டும்.

மதுரையில் உள்ள அனைத்து உயர் காவல் அதிகாரிகளும் குற்றவாளிகளாகச் செயல்படுகிறார்கள்

- மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேட்டி .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.