ETV Bharat / briefs

புதுக்கோட்டையில் 8,800 பேருக்கு கரோனா பரிசோதனை - மாவட்ட ஆட்சியர் தகவல்

author img

By

Published : Jun 22, 2020, 5:25 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,800 பேருக்கு கரோனா பரிசோதனை - மாவட்ட ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,800 பேருக்கு கரோனா பரிசோதனை - மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை: இதுவரையில் மாவட்டத்தில் எட்டாயிரத்து 800 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் வர்த்தக காய்கனி வியாபாரிகள் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வணிக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, “புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் தான் தொற்று ஏற்பட்டு வருகிறது.

அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்கள் பரிசோதனைக்கு பின்பு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1,200 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல், 36 வெண்டிலேட்டர் கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில் 86 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் எட்டாயிரத்து 800 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை செயல்பட வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.