ETV Bharat / briefs

சேலத்தில் இடுகாடு பிரச்னை - உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்துப் போராட்டம்

author img

By

Published : Jun 30, 2020, 2:42 AM IST

Cemetery Problem in Salem
Cemetery Problem in Salem

சேலம்: ஏற்காடு அடிவாரத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் மறுத்ததால், சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு அடிவாரம் அருகே உள்ள சின்னக்கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், தங்கள் சமுதாய மக்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு கல்லறைத்தோட்டம் வேண்டி, கடந்த நான்கு ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் சேலம் - சின்னக்கொல்லப்பட்டி அருகே உள்ள சத்யா நகர்ப் பகுதியில் உள்ள இடுகாட்டில் உடலை அடக்கம் செய்ய, மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.

இதற்கு சத்யா நகரில் வசிக்கும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பினர்களிடையே அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண இருந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக, பேச்சுவார்த்தை தள்ளிப்போனது.

இதற்கிடையில் ஜூன் 28ஆம் தேதி இரவு சின்னக்கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த மரியம்மாள்(67) என்ற மூதாட்டி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் உடலை அடக்கம் செய்ய சத்யா நகர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேலும் அரசு அலுவலரின் சமரச பேச்சு வார்த்தைக்கு முன்னதாக உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் எனவும் அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, உடலை நல்லடக்கம் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.