ETV Bharat / state

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Feb 22, 2022, 6:16 AM IST

Updated : Feb 22, 2022, 7:57 PM IST

ஸ்டாலின்
ஸ்டாலின்

19:53 February 22

அதிமுக கைப்பற்றிய இடம்

  • மாநகராட்சியில் 164 வார்டுகள், நகராட்சியில் 638 வார்டுகள், பேரூராட்சியில் 1206 வார்டுகளை இதுவரை அதிமுக கைப்பற்றியுள்ளது.

19:46 February 22

திமுக கைப்பற்றிய இடம்

  • இதுவரை வெளியாகியுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.
  • 934 மாநகராட்சி வார்டுகள்
  • நகராட்சியில் 2360 வார்டுகள்
  • பேரூராட்சியில் 4388 வார்டுகளை இதுவரை திமுக கைப்பற்றியுள்ளது.

19:41 February 22

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 22 மாநகராட்சி வார்டுகள்
  • நகராட்சியில் 56 வார்டுகள்
  • பேரூராட்சியில் 230 வார்டுகளை இதுவரை பாஜக கைப்பற்றியுள்ளது.

19:32 February 22

3வது பெரிய கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ்

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - 3வது பெரிய கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் கட்சி
  • காங்கிரஸ் கட்சி 71 மாநகராட்சி வார்டுகள், 151 நகராட்சி வார்டுகள், 368 பேரூராட்சி வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

19:23 February 22

மக்களின் மனங்களை வென்றெடுக்கும் வரை உத்வேகத்தோடு நம் பணியைத் தொடர்வோம் - டிடிவி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி.

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் பணபலமும், அதிகார பலமும்தான் கொடிகட்டிப் பறக்கும் என்பது தெரிந்திருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகளாக நெஞ்சுரத்தோடு களம் கண்ட கழக வேட்பாளர்களுக்கும் அவர்களுக்காகப் பணியாற்றிய கழக உடன்பிறப்புகளுக்கும் வெற்றி வாகை சூடிய கண்மணிகளுக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்.

தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்கும் வரை உத்வேகத்தோடு நம் பணியைத் தொடர்வோம்" என டிடிவி ட்வீட் செய்துள்ளார்.

19:14 February 22

வெற்றிக்கு உழைத்த முத்தமிழறிஞரின் உடன்பிறப்புகளுக்கு என் அன்பு - உதயநிதி ட்வீட்

வெற்றிக்கு உழைத்த முத்தமிழறிஞரின் உடன்பிறப்புகளுக்கு என் அன்பு -  உதயநிதி ட்வீட்
வெற்றிக்கு உழைத்த முத்தமிழறிஞரின் உடன்பிறப்புகளுக்கு என் அன்பு - உதயநிதி ட்வீட்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்றுவரும் நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான கழக அரசுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரமே நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி. வாக்களித்தவர்களுக்கு நன்றி. வெற்றிக்கு உழைத்த முத்தமிழறிஞரின் உடன்பிறப்புகளுக்கு என் அன்பு. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப உழைக்கவேண்டியது நம் கடமை. வாழ்த்துகள் என உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.

19:13 February 22

"வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன்” - முதலமைச்சர் ஸ்டாலின்

வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
வெற்றியால் கர்வம் கொள்ளவில்லை; பொறுப்புகள் கூடியிருப்பதையே உணர்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

19:04 February 22

எத்தனை இன்னல்கள் வந்தாலும் மக்கள் பணியில் அதிமுக தொடர்ந்து பாடுபடும் - எடப்பாடி

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
  • நகர்ப்புற தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.
  • எத்தனை இன்னல்கள் வந்தாலும் மக்கள் பணியில் அதிமுக தொடர்ந்து பாடுபடும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

19:00 February 22

வாக்களித்த மக்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி - திருமா

  • நகர்புற உள்ளாட்சித் தேர்தல்
    திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி!
    தென்னைமரம் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் மகத்தான வெற்றி!
    வாக்களித்த மக்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி ! #விசிகவெற்றி#தென்னைமரம் pic.twitter.com/MQJ6mW6oCN

    — Thol. Thirumavalavan (@thirumaofficial) February 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தென்னைமரம் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் மகத்தான வெற்றி. வாக்களித்த மக்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.

18:52 February 22

பேரூராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்

489 பேரூராட்சியில் மொத்தமுள்ள 7,604 பேரூராட்சி வார்டுகளில் 4,407 இடங்களில் திமுக வெற்றி, காங்கிரஸ் 365, மதிமுக 20, விசிக 31, அதிமுக 1,214, பாஜக 233, பாமக 63, அமமுக 49, தேமுதிக 23, நாம் தமிழர் 5, மற்றவை 1060 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

18:45 February 22

நகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்

138 நகராட்சியில் மொத்தமுள்ள 3,842 நகராட்சி வார்டுகளில் 2,370 இடங்களில் திமுக வெற்றி, அதிமுக 640, காங்கிரஸ் 137, பாஜக 58, பாமக 43, மதிமுக 28, விசிக 17, அமமுக 30, தேமுதிக 11, மற்றவை 420 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

17:40 February 22

மாநகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்

21 மாநகராட்சியில் மொத்தமுள்ள 1,373 மாநகராட்சி வார்டுகளில் 920 இடங்களில் திமுக வெற்றி, அதிமுக 155, காங்கிரஸ் 105, பாஜக 22, மதிமுக 19, விசிக 11, பாமக 5, அமமுக 3, மற்றவை 68 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

17:38 February 22

அண்ணா நினைவிடங்களில் ஸ்டாலின்

அண்ணா நினைவிடங்களில் ஸ்டாலின்
அண்ணா நினைவிடங்களில் ஸ்டாலின்
  • சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

17:24 February 22

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
  • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

17:10 February 22

இது திராவிட மாடல் புரட்சியாகும் - ஸ்டாலின்

  • இது திராவிட மாடல் புரட்சியாகும் - ஸ்டாலின்
  • உள்ளாட்சியில் பெண்களுக்குத் தரப்பட்ட ஒதுக்கீட்டால், சமூகத்தில் சரிபாதி பெண்கள் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள்.
  • மக்களை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக உள்ளேன்.
  • அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட கொங்கு மண்டலத்தையே இன்று கைப்பற்றியிருக்கிறோம்.
  • திமுக மீதான மக்களின் நம்பிக்கையை 100% காப்பாற்றுவோம் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

17:04 February 22

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது - முதலமைச்சர் ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது - முதலமைச்சர் ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது - முதலமைச்சர் ஸ்டாலின்
  • தேர்தல் வெற்றி குறித்து அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் பேட்டி, கடந்த 9 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்றுதான் இந்த வெற்றி
  • திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரம் இது
  • நகர்ப்புற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி வெற்றியை தேடி தந்த தமிழக மக்களுக்கு நன்றி
  • நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மகத்தான வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

17:00 February 22

தேர்தல் வெற்றி குறித்து : முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி
முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி
  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி
  • திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிபெற்ற வேட்பாளர்களை, திமுக தொண்டர்களைச் சந்தித்தார்.

16:56 February 22

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான் - ஓபிஎஸ் அறிக்கை

  • தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மமே மறுபடி வெல்லும் - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை
  • மக்கள் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும்
  • உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான்
  • நடந்து முடிந்த தேர்தல் மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பே அல்ல
  • நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் அதிமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

16:47 February 22

சென்னை மாநகராட்சியில் பாஜக வெற்றி

  • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 134 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 2000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.
  • காங்கிரஸ் வேட்பாளர் சுசீலா கோபாலகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் 3503
  • பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் பெற்ற வாக்குகள் 5539
  • அதிமுக வேட்பாளர் அனுராதா பெற்ற வாக்குகள் 2695

16:27 February 22

சேலம் மாநகராட்சியில் திமுக முன்னிலை

  • சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில், திமுக 39 இடங்களில் வெற்றி
  • அதிமுக 4 வெற்றி
  • மற்றவைகள் 2 வெற்றி

16:24 February 22

தாம்பரம் மாநகராட்சி தற்போதைய நிலவரம்

  • தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில், திமுக 38 இடங்களில் வெற்றி
  • அதிமுக 6 வெற்றி
  • சுயேச்சை 5 வெற்றி

16:14 February 22

தொண்டர்களை சந்திக்கும் ஸ்டாலின்

திமுக மாபெரும் வெற்றி
திமுக மாபெரும் வெற்றி
  • திமுக மாபெரும் வெற்றி : அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

15:52 February 22

ஒற்றை இலக்கத்தை தாண்டாத நாம் தமிழர் கட்சி!

ஒற்றை இலக்கத்தை தாண்டாத நாம் தமிழர் கட்சி!

15:50 February 22

15:46 February 22

பாடகர் கானா பாலா தோல்வி

பாடகர் கானா பாலா தோல்வி

15:43 February 22

ஒடையகுளம் பேரூராட்சியை முழுமையாக கைப்பற்றியது திமுக

  • கோவை மாவட்டம் ஒடையகுளம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்று பேரூராட்சியை முழுமையாக கைப்பற்றியது!

15:39 February 22

  • ராஜபாளையத்தை முதல்முறையாக கைப்பற்றியது திமுக!

15:34 February 22

முன்னாள் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேரு தோல்வி

  • முன்னாள் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேரு தோல்வி திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் போட்டியிட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி

15:17 February 22

மாநகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்

  • 21 மாநகராட்சியில் மொத்தமுள்ள 1,373 மாநகராட்சி வார்டுகளில் 705 இடங்களில் திமுக வெற்றி, அதிமுக 119, காங்கிரஸ் 81, பாஜக 16, பாமக 4, மதிமுக 6, விசிக 4 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

14:38 February 22

வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

  • மதுரை மேலூர் நகராட்சி 9ஆவது வார்டில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் அருண்சுந்தரபிரபு அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
  • 15 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அருண்சுந்தரபிரபு வெற்றி பெற்றிருந்தார்

14:16 February 22

மாநகராட்சியை கைப்பற்றிய திமுக

திமுக மாபெரும் வெற்றி
திமுக மாபெரும் வெற்றி
  • தஞ்சாவூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது
  • தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் 34 இடங்களில் திமுக வெற்றி; அதிமுக 6 வார்டுகளில் வெற்றி
  • திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது
  • திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 36 இடங்களில் திமுக வெற்றி; அதிமுக 4 வார்டுகளில் வெற்றி
  • சிவகாசி மாநகராட்சியை கைப்பற்றியது திமுக
  • சிவகாசி மாநகராட்சியில் திமுக கூட்டணி 33 வார்டுகளிலும், அதிமுக 11 வார்டுகளிலும் வெற்றி
  • கரூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது
  • கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 40 இடங்களில் திமுக வெற்றி
  • அதிமுக 2 வார்டுகளில் வெற்றி
  • நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது

14:03 February 22

சேலத்தில் அதிமுக கோட்டை தகர்ந்தது!

சேலத்தில் அதிமுக கோட்டை தகர்ந்தது!

13:51 February 22

திமுக மாபெரும் வெற்றி: ஸ்டாலினை சந்தித்து திமுக மூத்த நிர்வாகிகள் வாழ்த்து

ஸ்டாலினை சந்தித்து திமுக மூத்த நிர்வாகிகள் வாழ்த்து
ஸ்டாலினை சந்தித்து திமுக மூத்த நிர்வாகிகள் வாழ்த்து

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.

13:48 February 22

தாம்பரம் மாநகராட்சி நிலவரம்

  • மொத்தம் உள்ள 70 வார்டுகளில், திமுக கூட்டணி 13 இடங்களில் வெற்றி
  • சுயேட்சை - 3 - வெற்றி
  • பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவானது.

13:45 February 22

ஓபிஎஸ்: பெரியகுளம் நகராட்சியை திமுக கைப்பற்றுகிறது

  • அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் நகராட்சியை திமுக கைப்பற்றுகிறது.
  • மொத்தம் உள்ள 30 வார்டுகளில், திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி
  • அதிமுக 2 இடங்களில் வெற்றி

13:43 February 22

  • வேலூர் : குடியாத்தம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 23 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி
  • 10 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி

13:40 February 22

சென்னை மாநகராட்சியில் திமுக முன்னிலை..

  • சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 52 வார்டுகளில் திமுக வெற்றி
  • 7 வார்டுகளில் அதிமுக வெற்றி
  • சென்னை மாநகராட்சியில் இதுவரை 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி

13:26 February 22

மநீம வேட்பாளர் 1 வாக்கு கூட பெறவில்லை

  • சிவகங்கை 1 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செங்கோல் 1 வாக்கு கூட பெறவில்லை.

13:14 February 22

அதிமுக கோட்டையான கோவை திமுக வசமானது!

  • கோயம்புத்தூர் மாநகராட்சி, 7 நகராட்சி மற்றும் 33 பேரூராட்சிகளை திமுக முழுமையாக கைப்பற்றியது.
  • அதிமுக கோட்டையான கோயம்புத்தூர் திமுக வசமானது.

13:11 February 22

தூத்துக்குடியில் அதிமுக படுதோல்வி!

  • தூத்துக்குடி மாநகராட்சியில் கட்சி வாரியாக வெற்றிபெற்ற இடங்கள் விவரம்
  • மொத்தம் வார்டுகள் எண்ணிக்கை - 60
  • திமுக - 44
  • அதிமுக - 6
  • காங்கிரஸ் - 3
  • கம்யூனிஸ்ட் - 2
  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1
  • சுயேட்சை - 4

13:09 February 22

கோவை மாவட்டத்தில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது

  • கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது
  • வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக கைப்பற்றியது
  • மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 10 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்

12:56 February 22

தருமபுரி பேரூராட்சிகளில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி சாதனை

  • தருமபுரி : அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி அவரது சொந்த ஊர் காவேரிப்பட்டிணம் பேரூராட்சியில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி சாதனை.
  • தருமபுரி - கடத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது
  • திமுக-10 வார்டுகளில் வெற்றி
  • அதிமுக-2 வார்டுகளிலும்
  • விசிக-2 வார்டுகளிலும் வெற்றி
  • பாமக-1 வார்டுகளிலும் வெற்றி

காரியமங்கலம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

  • காரியமங்கலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
  • திமுக -10 வார்டுகளில் வெற்றி
  • அதிமுக-3 வெற்றி
  • பாமக-1 வெற்றி
  • சுயேச்சை-1 வெற்றி

பாப்பாரப்பட்டி பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

  • திமுக-11 வார்டுகளில் வெற்றி
  • அதிமுக-1 வெற்றி
  • சுயேச்சை-2
  • சிபிஐ-1

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

  • திமுக -11 வார்டுகளில் வெற்றி
  • சுயேச்சை-2
  • விசிக-1
  • காங்கிரஸ்-1

கம்பைநல்லூர் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

  • திமுக- 7 வார்டுகளில் வெற்றி
  • அதிமுக-2
  • பாமக-4
  • சுயேச்சை-2

பாலக்கோடு பேரூராட்சி கைப்பற்றிய திமுக

  • திமுக-15
  • அதிமுக-2
  • சுயேச்சை-1

12:49 February 22

மதுரை மாநகராட்சி திமுக முன்னிலை

  • மதுரையில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 36 வார்டுகளில் திமுக வெற்றி
  • 7 வார்டுகளில் அதிமுக வெற்றி
  • 2 வார்டுகளில் மற்றவை வெற்றி

12:36 February 22

தூத்துக்குடி மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

  • மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
  • அதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
  • மற்றவைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

12:34 February 22

நாகர்கோவில் மாநகராட்சி திமுக முன்னிலை

  • மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
  • அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது
  • பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

12:24 February 22

திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றுகிறது

  • திண்டுக்கல் மாநகராட்சியில்மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 24 இடங்களில் வெற்றி
  • அதிமுகவை விட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று வருவதால், மாநகராட்சியை கைப்பற்றுகிறது.

12:22 February 22

அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளதால், சென்னையில் உள்ள திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அக்கட்சி

12:11 February 22

21 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் திமுக முன்னிலை

  • 21 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் திமுக முன்னிலை
  • 322 பேரூராட்சிகளில் திமுக முன்னிலை
  • அதிமுக 6 நகராட்சிகளில், 22 பேரூராட்சிகளில் முன்னிலை..

12:05 February 22

  • சென்னை அதிமுக மேயர் வேட்பாளர் என சொல்லப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தோல்வி.
  • பேரூராட்சிகளில் 1000 வார்டுகளைத் தாண்டி திமுகவின் வெற்றி தொடர்கிறது.

11:51 February 22

வெற்றிக் கனியை ருசித்த விஜய் மக்கள் இயக்கம் !

வெற்றிக் கனியை ருசித்த விஜய் மக்கள் இயக்கம்
வெற்றிக் கனியை ருசித்த விஜய் மக்கள் இயக்கம்
  • குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட வேல்முருகன், வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டார்!
  • ராணிப்பேட்டை வாலாஜா நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு வார்டில் வெற்றி. விஜய் மக்கள் இயக்கத்திற்கு மேலும் ஒரு வெற்றி.
  • புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பர்வேஸ் வெற்றி.
  • வெற்றிக் கனியை ருசித்த விஜய் மக்கள் இயக்கம் - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

11:24 February 22

21 மாநகராட்சிகள், 117 நகராட்சிகளில் திமுக முன்னிலை

திமுக முன்னிலை
திமுக முன்னிலை
  • சென்னை மாநகராட்சியில் இதுவரை வெளியான நிலவரப்படி திமுக முன்னிலையில் உள்ளது.
  • 21 மாநகராட்சிகள், 117 நகராட்சிகளில், 295 பேரூராட்சிகளில் திமுக முன்னிலை..
  • அதிமுக 8 நகராட்சிகளில், 20 பேரூராட்சிகளில் முன்னிலை..

11:19 February 22

சென்னை மாநகராட்சியில் இளம் வேட்பாளர்

  • சென்னை மாநகராட்சியில் 4000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற இளம் வேட்பாளர்!
  • சென்னை 136வது வார்டில் 22வயது இளம்பெண் நிலவரசி துரைராஜ் வெற்றி.

11:16 February 22

விருதுநகர் நகராட்சியை முதல்முறையாக திமுக கைப்பற்றியது

  • விருதுநகர் நகராட்சியை முதல்முறையாக திமுக கைப்பற்றியது.
  • மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக - 20 வெற்றி பெற்றுள்ளது.
  • காங்கிரஸ் - 8 வார்டுகளில் வெற்றி
  • அதிமுக - 3 வார்டுகளில் வெற்றி

11:14 February 22

கொல்லங்கோடு நகராட்சி பாஜக

கன்னியாகுமரி மாவட்டத்தின் கொல்லங்கோடு நகராட்சி 1வது வார்டில் பாஜக வெற்றி; அம்மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளிலும் இதுவரை 8 வார்டுகளை அக்கட்சி வென்றுள்ளது.

11:11 February 22

  • சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மநீம வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
  • தஞ்சை ஒரத்தநாடு பேரூராட்சியைக் கைப்பற்றியது அமமுக.
  • திருச்சியில் 2 இடங்களில் ஐஜேகே வெற்றி
  • அரவக்குறிச்சி பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

11:06 February 22

சோலூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

  • நீலகிரி : சோலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 10 இடங்களில், சுயேச்சை வேட்பாளர்கள் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

1-திமுக

2-திமுக

3-சுயேச்சை

4-சுயேச்சை

5-திமுக

6-சுயேச்சை

7-திமுக

8- திமுக

9-திமுக

10-சுயேச்சை

11- சுயேச்சை

12-திமுக

13- காங்கிரஸ்

14-திமுக

15-திமுக

11:00 February 22

நத்தம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

  • திண்டுக்கல் : நத்தம் பேரூராட்சி தேர்தல் முடிவுகள்
  • திமுக- 10
  • அதிமுக-6 இடங்களைப் பிடித்தது
  • திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ்-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1
  • திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 12 இடங்களைப் பிடித்தது
  • நத்தம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக 12 வெற்றி பெற்றுள்ளது.

10:54 February 22

கோவை மாநகராட்சியில் முடிவுகள்

  • கோவை மாநகராட்சியில் முடிவுகள் வெளியான அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று திமுக கூட்டணி அபாரம்!
  • கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 2 வார்டுகளில் வெற்றி
  • கோவை 4, 7, 31, 37, 62, 76வது வார்டுகளில் திமுக வெற்றி.
  • கோவை 5, 71வது வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி.

10:49 February 22

பேரளம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

  • திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளம் பேரூராட்சியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முடிவடைந்தது.

1.சித்ரா - CPI(M)

2.கமலா - திமுக

3.ராதா - திமுக

4.ரவிச்சந்திரன் - திமுக

5.மீனாட்சி - திமுக

6.கீதா - திமுக

7.சுபத்ரா - திமுக

8.செந்தில்குமார் - அதிமுக

9.கணேசன் - திமுக

10.விஜயலெட்சுமி - திமுக

11.சந்திரா - அதிமுக

12.கென்னடி - அதிமுக

10:35 February 22

உத்திரமேரூர் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

காஞ்சிபுரம் உத்திரமேரூர் பேரூராட்சி 18 வார்டுகள் வெற்றி நிலவரம்

  • திமுக 12 வெற்றி
  • அதிமுக 2 வெற்றி
  • பாமக 1 வெற்றி
  • உத்திரமேரூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக 12 வெற்றி பெற்றுள்ளது.
  • உத்திரமேரூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

10:34 February 22

ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக படுதோல்வி

  • தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் திமுக 11 இடங்களைக் கைப்பற்றியது.
  • ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
  • அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
  • குச்சனூர் பேரூராட்சி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.

10:22 February 22

வாலாஜாபாத் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

  • காஞ்சிபுரம் - வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் வெற்றி நிலவரம்
  • திமுக - 10
  • அதிமுக - 5
  • வாலாஜாபாத் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 10 வெற்றி பெற்றுள்ளதையடுத்து.
  • வாலாஜாபாத் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது.

10:20 February 22

திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி

  • வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி!

10:19 February 22

கோவை அதிமுக மேயர் வேட்பாளர் தோல்வி..!

10:16 February 22

பள்ளப்பாளையம் பேரூராட்சி கைப்பற்றிய திமுக

  • கோவை மாவட்டம் பள்ளப்பாளையம் பேரூராட்சியில் 6 வார்டுகளில் 5 வார்டுகளை திமுக கைப்பற்றி வெற்றி

10:11 February 22

கோவை வெற்றி முகத்தில் திமுக

  • தொண்டாமுத்தூர் பேருராட்சி

1வது வார்டு - திமுக

2வது வார்டு - திமுக

3வது வார்டு - திமுக

4வது வார்டு - திமுக

5வது வார்டு - திமுக

6வது வார்டு - திமுக

  • வேடபட்டி பேரூராட்சி

1வது வார்டு - அதிமுக

2வது வார்டு - திமுக

3வது வார்டு - திமுக

4வது வார்க- திமுக

5வது வார்டு - திமுக

6வது வார்டு- அதிமுக

  • தாளியூர் பேரூராட்சி

1 வது வார்டு - திமுக

2 வது வார்டு- ADMK

3வது வார்டு - திமுக

4வது வார்டு - திமுக

5வது வார்டு - திமுக

6வது வார்டு - திமுக

  • பேரூர் பேரூராட்சி

1 வது வார்டு - திமுக

2 வது வார்டு - திமுக

3வது வார்டு - திமுக

4வது வார்டு - திமுக

5வது வார்டு - திமுக

6வது வார்டு - திமுக

7வது வார்டு - அதிமுக

8வது வார்டு - திமுக

10:08 February 22

விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் வெற்றி

  • புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பர்வேஸ் வெற்றி!

09:59 February 22

சென்னை மாநகராட்சியில் வெற்றி முகத்தில் திமுக

  • சென்னை மாநகராட்சி: அறிவித்த அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி
  • சென்னை மண்டலம் 13 - வார்டு 174 : 4502 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராதிகா வெற்றி
  • வார்டு 121 - திமுக வேட்பாளர் மதிவாணன் 3112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
  • வார்டு 115 - திமுக வேட்பாளர் ஈஸ்வரி வெங்கடேசன் வெற்றி பெற்றார்
  • வார்டு 109 - காங்கிரஸ் வேட்பாளர் சுகன்யா வெற்றி

09:54 February 22

குளித்தலை நகராட்சி வெற்றி நிலவரம்

  • குளித்தலை நகராட்சி 24 வார்டுகளில் 8 வார்டுகள் வெற்றி நிலவரம்.
  • 1வது வார்டு- கண்ணகி - திமுக வெற்றி
  • 2வது வார்டு- சந்துரு - திமுக வெற்றி
  • 3வது வார்டு- பொன்னர் - திமுக வெற்றி
  • 4வது வார்டு- பிச்சை - திமுக வெற்றி
  • 5வது வார்டு- சரோஜா - திமுக வெற்றி
  • 6வது வார்டு- கோமதி - திமுக வெற்றி
  • 7வது வார்டு- சையது உசேன் (சுயேட்சை)
  • 8வது வார்டு - சகிலா பானு (சுயேட்சை)

09:49 February 22

தஞ்சை மாநகராட்சியில் திமுக முன்னிலை

  • தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளில் திமுக 14 முன்னிலை

09:47 February 22

ஸ்ரீபெருமந்தூர் பேரூராட்சி

ஸ்ரீபெருமந்தூர் பேரூராட்சி 15 வார்டுகளில் அதிமுக 1, சுயேச்சை 1

09:47 February 22

வாலாஜாபாத் பேரூராட்சியில் திமுக வெற்றி

  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக 6 வெற்றி, அதிமுக 3 வெற்றி

09:38 February 22

நெல்லை மாநகராட்சி திமுக முன்னிலை

  • நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக முன்னிலை.
  • மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் 1, 5, 15 ஆகிய மூன்று இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது
  • அதேபோல் 31வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

09:35 February 22

திண்டுக்கல், கடலூர் மாநகராட்சி

  • திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக, பாஜக தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது
  • திண்டுக்கல் மாநகராட்சியில் 7 வார்டுகளில் திமுக வெற்றி
  • திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுக, பாஜக தலா ஒரு வார்டில் வெற்றி
  • கடலூர் மாநகராட்சியில் திமுக, விசிக தலா 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது
  • கடலூர் மாநகராட்சியில் திமுக, விசிக தலா 2 வார்டுகளில் வெற்றி

09:29 February 22

திருச்சி மாநகராட்சி திமுக முதல் வெற்றி

  • திருச்சி மாநகராட்சி: திமுக முதல் வெற்றி
  • பெரம்பலூர்: லெப்பைக்குடிகாடு பேரூராட்சி 1வது வார்டில் திமுக வெற்றி
  • பெரம்பலூர்: லெப்பைக்குடிகாடு பேரூராட்சி 3வது வார்டில் திமுக கூட்டணி வெற்றி

09:25 February 22

கோவையில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

  • கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் ஒன்றில் காங்கிரஸ் வெற்றி 5வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன் வெற்றி

09:20 February 22

நெல்லை மாவட்ட நிலவரம்

  • திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பேரூராட்சி 1 வது வார்டு திமுக வேட்பாளர் கிருஷ்ணம்மாள் 304 வாக்குகள் பெற்று வெற்றி.
  • திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பேரூராட்சி 2 வது வார்டு திமுக வேட்பாளர் மாரியம்மாள் 125 வாக்குகள் பெற்று வெற்றி.
  • நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சியில் இரண்டாவது வார்டில் சுயேச்சையும், 3வது வார்டில் அதிமுகவும் வெற்றி
  • நாரணம்மாள்புரம் பேரூராட்சி வார்டு 1 வேட்பாளர் ராஜேஸ்வரி வெற்றி
  • ஏர்வாடி பேரூராட்சி 1-வது வார்டில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் ஜனத் வெற்றி
  • ஏர்வாடி பேரூராட்சி 3வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செய்யது அலி பாத்திமா வெற்றி
  • கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் 1-வது வார்டில் திமுக வெற்றி

09:15 February 22

சென்னை, மதுரை மாநகராட்சியில் திமுக முன்னிலை

  • சென்னை மாநகராட்சியில் 1,8,15,49,181,59,94,196,174 ஆகிய வார்டுகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
  • சென்னை மாநகராட்சியில் இதுவரை வெளியான நிலவரப்படி திமுக முன்னிலையில் உள்ளது.
  • மதுரை மாநகராட்சியில் இதுவரை முடிவுகள் வெளியான 7 வார்டுகளிலும் திமுகவே வெற்றி
  • மதுரை மாநகராட்சியில் 1, 43, 50, 5 ஆகிய வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

09:09 February 22

திமுக VS அதிமுக முன்னிலை

  • 11 மாநகராட்சிகள், 36 நகராட்சிகளில் திமுக முன்னிலை
  • 129 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி முன்னிலை
  • 4 நகராட்சிகளில், 16 பேரூராட்சிகளில் அதிமுக முன்னிலை

09:05 February 22

மதுரை மாநகராட்சி நிலவரம்

  • மதுரை மாநகராட்சி 70வது வார்டில் திமுக வேட்பாளர் அமுதா வெற்றி
  • அலங்காநல்லூர் பேரூராட்சி 2வது வார்டில் திமுக வேட்பாளர், 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
  • மதுரை மாநகராட்சி - 3 வார்டுகளில் திமுக வெற்றி!

09:03 February 22

கருமத்தம்பட்டி நகராட்சி நிலவரம்

  • கருமத்தம்பட்டி நகராட்சி 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வாணி ஸ்ரீ வெற்றி 504 வாக்குகள்
  • இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் ரமேஷ் 467 வாக்குகள் பெற்று வெற்றி
  • 3வது வார்டு திமுக வேட்பாளர் பழனியம்மாள் 378 வாக்குகள் பெற்று வெற்றி
  • நான்காவது வார்டு சுயேட்சை வேட்பாளர் ராதாமணி 613 வாக்குகள் பெற்று வெற்றி

09:01 February 22

சென்னையில் வாக்கு எண்ணிக்கை முறையில் மாற்றம்

  • சென்னை மாநகராட்சி - தபால் வாக்கு எண்ணிக்கை முறையில் மாற்றம்
  • ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மொத்தமாக உள்ள தபால் வாக்குகள் வார்டு வாரியாக பிரிக்கப்படுகின்றன.
  • வார்டு வாரியாக தபால் வாக்குகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் ஒரே நேரத்தில் எண்ணப்படுகின்றன.
  • ஒரு வார்டில் தபால் வாக்கு மற்றும் இயந்திர வாக்குப்பதிவு எண்ணி முடிக்கப்பட்ட பிறகு அடுத்த வார்டு தபால் வாக்கும் மின்னணு இயந்திர வாக்கும் எண்ணப்படுகிறது.

08:56 February 22

கோவையில் வெற்றி கணக்கை தொடங்கிய திமுக

  • கோவை - பெரியநெகமம் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக!
  • கோவை - வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 6 இடங்களில் திமுக இதுவரை வெற்றி
  • ஈரோடு - கொடிவேரி பேரூராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் தமிழ்மகன் சிவா வெற்றி
  • திண்டுக்கல் - நத்தம் பேரூராட்சியில் 2 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது
  • திருவாரூர் - பேரளம் பேரூராட்சியில் 1வது வார்டில் மார்க்சிஸ்ட், 2வது வார்டில் திமுக வெற்றி
  • நெல்லை - நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் ராஜேஸ்வரி வெற்றி

08:45 February 22

எஸ்.பி. வேலுமணி தொகுதியில் திமுக வெற்றி

  • கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 1, 2 வார்டுகளில் திமுக வெற்றி ( இது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொகுதி )
  • வேடப்பட்டி பேரூராட்சியில் 2 வார்டுகளில் திமுக, 1 வார்டில் அதிமுக வெற்றி
  • கோவையில் வெற்றி கணக்கை தொடங்கிய திமுக

08:38 February 22

8 மாநகராட்சிகள், 24 நகராட்சிகளில் திமுக முன்னிலை.. அதிமுக 2 நகராட்சிகளில் முன்னிலை..

  • 8 மாநகராட்சிகள், 24 நகராட்சிகளில் திமுக முன்னிலை
  • 102 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி முன்னிலை
  • 2 நகராட்சிகளில், 17 பேரூராட்சிகளில் அதிமுக முன்னிலை

08:37 February 22

கோவையில் சுயேச்சை வேட்பாளர் கவிதா வெற்றி

  • கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சி 1 வது வார்டு சுயேச்சை வேட்பாளர் கவிதா வெற்றி ( தண்ணீர் குழாய் சின்னம் )

08:34 February 22

15 பேரூராட்சிகளில் அதிமுக முன்னிலை

  • 15 பேரூராட்சிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை
  • 2 பேரூராட்சிகளில் பாஜக முன்னிலை

08:31 February 22

96 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி முன்னிலை

  • 489 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் 96 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி முன்னிலை

08:26 February 22

சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதம்

  • கடலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
  • விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோயில் தனியார் கல்லூரியில் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் வ.புதுப்பட்டி பேரூராட்சி தபால் பெட்டியின் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்ட பின்னர் தபால் ஓட்டு எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

08:19 February 22

7 மாநகராட்சிகள், 14 நகராட்சிகளில் திமுக முன்னிலை

  • 138 நகராட்சியில் 14 நகராட்சிகளில் திமுக முன்னிலை
  • 21 மாநகராட்சியில் 7 மாநகராட்சிகளில் திமுக முன்னிலை

08:10 February 22

218 பேர் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாட்டில் 12,602 இடங்களுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

08:01 February 22

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
  • தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
  • முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
  • தபால் வாக்கு எண்ணப்பட்ட பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணப்படும்.
  • காலை 10 மணி முதல் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

07:55 February 22

அதிமுக கோட்டையான கோவையை திமுகவே கைப்பற்றுமா? அதிமுகவே மீண்டும் மகுடம் சூடுமா??

  • கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 802 வார்டு பதவியிடங்களுக்கு 17 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
  • மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி என தனித்தனியாக வாக்குகள் எண்ணப்படுகிறது.
  • கோவை மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கருமத்தம்பட்டி, கூடலூர், மதுக்கரை நகராட்சிக்கான தேர்தல் முடிவுகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
  • கோவை மாவட்டத்தில் 496 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் & 150 நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • கோவை மாநகரில் 2400 போலீசாரும், புறநகர்ப் பகுதியில் 1460 காவல்துறையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • ஒரு வேட்பாளருக்கு 3 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அவர்கள் வெளியேற வேண்டும்.
  • அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்குச் சாவடி மையத்திற்குள் அனுமதி இல்லை.
  • வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்று முடிவும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கோட்டையான திமுகவே கைப்பற்றுமா?? அதிமுகவே மீண்டும் மகுடம் சூடுமா எண்ணிக்கை முடிவில் தெரியவரும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

07:16 February 22

சென்னையில் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும்.

07:14 February 22

தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள்

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்ல தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள்

  • கொரோனா விதிமுறைகள் கட்டாயம்
  • செல்போன், கேமரா அனுமதி இல்லை

07:02 February 22

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

  • மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 21
  • மொத்த மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை - 1,373
  • மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை - 138
  • மொத்த நகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை - 3,842
  • மொத்த பேரூராட்சிகளின் எண்ணிக்கை - 489
  • மொத்த பேரூராட்சி வார்டுகளின் எண்ணிக்கை - 7,605
  • மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை - 30,735
  • மொத்த வாக்கு எண்ணிக்கை மையங்கள் - 268
  • போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை - 57,746
  • போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் - 218
  • மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2.83 கோடி(ஆண்கள் -1,38,72,328, பெண்கள் - 1,44,59,303, மூன்றாம் பாலினம் - 4702)
  • அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிட்ட வார்டுகள் - சென்னை மாநகராட்சி 190, 192ஆவது வார்டு
  • குறைந்தபட்ச வேட்பாளர்கள் போட்டியிட்ட வார்டுகள் - 1,714

06:46 February 22

முதலில் தபால் வாக்குகள்

ஒவ்வொரு வார்டுக்கும் முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவானவை எண்ணப்படும்.

பூத் முகவர்களுக்குத் தேர்தல் அலுவலர் வழங்கிய ஐடி கார்டு, ஆதார்/வாக்காளர் அட்டை, தடுப்பூசிச் சான்றிதழ் / கரோனா தொற்று இல்லை என்னும் சான்றிதழ் அவசியம், செல்போன், கேமரா எடுத்தவர அனுமதி இல்லை.

06:29 February 22

பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 268 மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளைக் கண்காணித்திடவும், தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பு செய்யவும், காவல் துறையினரின் மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, தடையில்லா மின்சார வசதி, கணினி வசதிகள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

06:05 February 22

வாக்கு எண்ணிக்கை

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப். 19ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 22) நடைபெறுகிறது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 268 மையங்களில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

Last Updated :Feb 22, 2022, 7:57 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.