ETV Bharat / bharat

ஒய்.எஸ்.ஷர்மிளா அதிரடி கைது; காவலர்களை தாக்கியதால் பரபரப்பு - என்ன நடந்தது?

author img

By

Published : Apr 24, 2023, 7:49 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகனின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.டி.பி கட்சியின் தலைவருமான ஷர்மிளா, போலீசாரை தாக்கியதால் கைது செய்யப்பட்டார்.

Y S Sharmila arrest
ஒய் எஸ் ஷர்மிளா கைது

ஹைதராபாத்: அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், தெலங்கானா அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடைபெற்ற நிலையில், வினாத்தாள் வெளியானதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை (ஏப்ரல் 24) சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அலுவலகத்துக்கு ஒய்.எஸ்.ஆர்.டி.பி கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா செல்ல உள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ஷர்மிளாவை தடுத்து நிறுத்தினார். இதனால் போலீசாருக்கும் - ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் போலீசாரை கண்டித்து ஷர்மிளா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் காரில் ஏறி செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவரைத் தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷர்மிளாவை கைது செய்த போலீசார், அவரை ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

  • #WATCH | YSRTP Chief YS Sharmila manhandles police personnel as she is being detained to prevent her from visiting SIT office over the TSPSC question paper leak case, in Hyderabad pic.twitter.com/StkI7AXkUJ

    — ANI (@ANI) April 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து, காவல் நிலையத்தில் இருக்கும் மகளை பார்ப்பதற்காக ஷர்மிளாவின் தாய் விஜயம்மா, ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்துக்குச் சென்றார். ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார். ஆத்திரம் அடைந்த விஜயம்மா, பெண் காவலர் ஒருவரை தள்ளிவிட்டதுடன் தாக்க முயன்றதால பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: மம்தா பானர்ஜி - நிதிஷ் குமார் திடீர் ஆலோசனை - பாஜகவுக்கு ஸ்கெட்சா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.