ETV Bharat / bharat

நள்ளிரவில் இளைஞர்கள் அட்டூழியம்: அரசு பேருந்தை வழிமறித்து, ஓட்டுநர் மீது தாக்குதல்!

author img

By

Published : Jul 11, 2022, 4:52 PM IST

ஆந்திராவில் ஸ்வர்ண பாரதி ஸ்டேடியம் சந்திப்பில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நள்ளிரவில் ஒன்று திரண்டு பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தை வழிமறித்து, ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நள்ளிரவில் இளைஞர்கள் அட்டூழியம்
நள்ளிரவில் இளைஞர்கள் அட்டூழியம்

ஆந்திரப் பிரதேசம் (விசாகப்பட்டினம்): ஆந்திரப் பிரதேசம் ஆர்டிசி வளாகம், ஸ்வர்ண பாரதி ஸ்டேடியம் சந்திப்பில் கடந்த சனிக்கிழமை இரவு 1 மணியளவில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டு பைக் சாகசத்தில் ஈடுபட்டும், பேரணியாகவும் சென்றனர்.

அப்போது, அவ்வழியாக அரசு பேருந்து ஒன்று சென்றது. பேருந்துக்கு வழிவிடுமாறு ஓட்டுநர் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்து மீது தாக்குதல் நடத்தினர். மேலும், ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்து அவரையும் தாக்கினர். இதை அங்கு சுற்றியிருந்த இளைஞர்கள் வீடியோ பதிவு செய்தனர்.

அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மீது தாக்குதல்

இதுதொடர்பாக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் இல்லாததால் 8வயது சிறுவன் மடியில் 2வயது தம்பியின் சடலம்- மத்திய பிரதேசத்தில் சோக சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.