ETV Bharat / bharat

சிறப்புக்கட்டுரை: உலக சைவ தினம் மற்றும் உலக சைவ மாதத்தின் தொடக்கம்!

author img

By

Published : Oct 31, 2022, 7:35 PM IST

World Vegan Day  World Vegan Day 2022  World Vegan Month 2022  World Vegan Month  Vegan  Veganism  Vegan Diet  November 1  November  உலக சைவ தினம்  உலக சைவ மாதம்  நவம்பர்  சைவ உணவு முறை  சைவ உணவு  காய்கறிகள்  பழங்கள்  தானியங்கள்  உலர் பழங்கள்  பால்  முட்டை
World Vegan Day

சைவ உணவு முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி அன்று உலக சைவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், நவம்பர் மாதம் சைவ மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இவை நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும், பல சமூகங்கள் மற்றும் நிறுவனங்களால் பின்பற்றப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள மக்களை விலங்குகள் சார்ந்த பொருட்களுக்குப் பதிலாக தாவர அடிப்படையிலான உணவு முறைகளுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், சைவ உணவு குறித்த தவறான எண்ணங்களை அகற்றும் நோக்கத்துடனும், நவம்பர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் உலக சைவ தினம் மற்றும் நவம்பர் மாதம் முழுவதும் உலக சைவ மாதமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

உலக சைவ தினம் முதன்முதலில் நவம்பர் 1, 1994அன்று இங்கிலாந்து சைவ சங்கத்தின் 50ஆவது ஆண்டு நினைவாக அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதியை உலக சைவ தினமாக கொண்டாட இங்கிலாந்து சைவ சங்கத்தின் தலைவர் முடிவு செய்தார். அன்றிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி, உலக சைவ தினமும் நவம்பர் மாதமம் உலக சைவ மாதமாகவும் கருதப்படுகிறது.

விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட உணவுகளை உட்கொள்ளாத சைவ உணவு வகைகள் பல உள்ளன. இவை வெறும் உணவுமுறை மட்டுமல்ல, சைவசித்தாந்தம் எனப்படும் வாழ்க்கை முறையாகக் கருதப்படுகிறது. சைவ உணவு என்பது விலங்குகளின் பால், முட்டை, இறைச்சி போன்றவை அல்லாது, காய்கறிகள், பழங்கள், தானியங்கள், விதைகள் மற்றும் உலர் பழங்கள் போன்ற தாவரங்களிலிருந்து பெறப்பட்ட உணவு மட்டுமே ஆகும்.

சைவ உணவைப் பின்பற்றுபவர்கள், விலங்குகளைக் துன்புறுத்துவதை குறைப்பதோடு, சைவ உணவு முறை ஒருவரின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்த உதவுகிறது என்று நம்புகிறார்கள். மரங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவு ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் மற்றும் பல வகையான நோய்களிலில் இருந்து பாதுகாக்கிறது என்பது அறியப்படுகிறது.

இந்த நிகழ்வு சைவ உணவு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதோடு மட்டுமல்லாமல், சைவ உணவு மற்றும் அதன் விளைவுகள் பற்றிய தவறான எண்ணங்களை அகற்றவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. உலக சைவ தினம் என்பது ஒரு மாத கால நிகழ்வின் தொடக்கமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி உலக சைவ மாதத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. சைவ சங்கம் இந்த மாதத்தை "சைவ இயக்கத்தில் ஒளி வீசும் காலம்" என்று விவரிக்கிறது. மறுபுறம், பண்ணை விலங்கு உரிமைகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் இதை "மிருகங்களுக்கான இரக்கம் மற்றும் புரிதலின் மாதம்" என்றும் அழைக்கிறார்கள்.

நவம்பர் மாதத்தில் சைவ உணவுகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு வகையான சைவ உணவுகள் வழங்குதல் போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். மேலும் பல கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

இந்தியாவிலும் பல கலாசாரங்களிலும் உள்ள பல மக்களும் சமூகங்களும் இத்தகைய சைவ உணவை ஊக்குவிப்பவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் உணவுக்காக மற்ற விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதை நம்பவில்லை.

தற்போதைய காலங்களில், சைவ உணவு என்பது ஒரு வாழ்க்கை முறை மட்டுமல்ல, அது ஒரு போக்காகவும் உள்ளது. இந்த உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக காணப்படுவது, நிறைவுற்ற கொழுப்பு மிகவும் குறைவாக இருப்பது மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது போன்ற பல நன்மைகள் இத்தகைய சைவ உணவில் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். இது தவிர, பல நோய்கள் மற்றும் உடல் நிலைகளுக்கு நிவாரணம் அளிக்கும் பல நன்மைகளையும் சைவ உணவுகள் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: நம் மனம் ஏன் நொறுக்குத் தீணிகளை நோக்கிச் செல்கிறது..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.