ETV Bharat / bharat

சாலையில் துணை நடிகை அரை நிர்வாணப் போராட்டம்!

author img

By

Published : May 10, 2022, 4:04 PM IST

சினிமா தயாரிப்பு நிறுவனம் முன்பு இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

geeta-arts
geeta-arts

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் சாலையில் உள்ள கீதா ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் முன்பு, 28 வயதுடைய பெண் ஒருவர், அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பெண் போலீசார், அந்தப் பெண்ணை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண் தன்னை தெலுங்கு சினிமாவின் துணை நடிகை என்று கூறிக் கொண்டதாகவும், அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், இவர் கடந்த சில ஆண்டுகளில் மூன்று முறை இதுபோல அரைநிர்வாண போராட்டங்களில் ஈடுட்டார் என்றும், அதற்காக மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.

இவர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்கவும், திருமண ஆசை காட்டி ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறியும், தயாரிப்பு நிறுவனத்தினர் தன்னை வன்கொடுமை செய்கிறார்கள் என்று கூறியும் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்த போலீசார், இந்த காரணங்கள் பெரும்பாலும் பொய்யாகவே இருக்கின்றன என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் மனநல காப்பகத்தில் அனுமதித்தனர்.

இதையும் படிங்க: பிறந்தநாளன்று மச்சான்ஸ்-களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நமீதா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.