ETV Bharat / bharat

ஹரியானா பாலியல் வன்கொடுமை; முன்னாள் அமைச்சர் சந்தீப் சிங்கிடம் விசாரணை

author img

By

Published : Jan 4, 2023, 10:12 PM IST

Etv Bharat
Etv Bharat

ஹரியானா வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் பயிற்சியாளர் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் சந்தீப் சிங்கிடம் (Harayna Minister Sandeep Singh) எஸ்ஐடி விசாரணை நடத்தியது.

சண்டிகர்: ஹரியானா மாநிலம் சண்டிகரில் பெண் பயிற்சியாளர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சந்தீப் சிங் (ஹரியானா மாநில முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்) மீது கடந்த ஜன.1 ஆம் தேதி புகார் அளித்த நிலையில், அவர் தனது பதவியை கடந்த ஜன.2 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

நாடெங்கும் மாநில அமைச்சர் ஒருவர் மீது எழுந்த பாலியல் புகாரும், அதைத் தொடர்ந்து அமைச்சரின் ராஜினாமாவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று (ஜன.4) ராஜினாமா செய்த பாலியல் புகாருக்கு ஆளான ஹரியானா மாநில முன்னாள் அமைச்சர் சந்தீப் சிங், டிஎஸ்பி பாலக் கோயல் தலைமையிலான சண்டிகர் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன்பு விசாரணைக்கு ஆஜாராகினார். இதனைத்தொடர்ந்து, பெண் பயிற்சியாளர் மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் வாக்குமூலம் அளித்தனர்.

இதனையடுத்து பெண் பயிற்சியாளரின் வழக்கறிஞர் திபன்ஷு பன்சால் கூறுகையில், 'எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அதன் கீழ், சந்தீப் சிங் இந்நேரம் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். எங்கோ, சண்டிகர் காவல்துறை இந்த விஷயத்தில் இன்னும் தீவிரமாக செயல்படவில்லை’ என்று அவர் கூறினார். இப்போது, பெண் பயிற்சியாளர் தனது இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.

’அந்த காட்சி அங்கு மீண்டும் ஒத்திகை காட்டப்படும்; ஏனென்றால், என்ன சம்பவம் நடந்ததோ, அந்த சம்பவங்கள் அனைத்தும் இந்த குடியிருப்பில்தான் நடந்தன. நேருக்கு நேர் உட்கார்ந்த பிறகும், இருவரையும் சண்டிகர் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும்' என்றும் அவர் கூறினார்.

இதனுடன், இந்த வழக்கிலும் 376, 511 ஆகிய பிரிவுகளை விதிக்க காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு செல்வதாகவும் அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.

முன்னதாக அவர், ’அமைச்சர் சந்தீப் சிங் வீட்டிற்கு வெளியே சண்டிகர் காவல்துறையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

சந்தீப் சிங் வீட்டிற்கு வெளியே தடுப்புகள் போடப்பட்டன. சண்டிகர் போலீசார் நேற்று அவரது வீட்டிற்கு வந்தனர். செக்டார்-26 காவல்நிலையத்தின் SHO தனது குழுவுடன் சந்தீப் சிங்கின் வீட்டை அடைந்தார். சண்டிகர் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகுமாறு, சந்தீப் சிங்கிற்கு நோட்டீஸ் கொடுக்க செக்டார்-26 காவல்நிலையத்தின் SHO வந்ததாக நம்பப்படுகிறது. SHO மற்றும் சந்தீப் சிங் 5 நிமிடங்களுக்குப் பிறகு ஊடகங்களுடன் பேசாமல் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.

முன்னதாக, நேற்று சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் பெண்கள் பயிற்சியாளரின் வாக்குமூலங்கள் பிரிவு 164-ன் கீழ் பதிவு செய்யப்பட்டன. சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில், குற்றச்சாட்டுகளை கூறிய, பெண் பயிற்சியாளரின் வாக்குமூலம், மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டது.

நேற்று சண்டிகர் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு பெண் பயிற்சியாளரின் வாக்குமூலத்தை பிரிவு 164-ன் கீழ் பிரிவு 26 காவல்நிலையத்தில் பதிவு செய்தது. இதனுடன், பெண் பயிற்சியாளர் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார். அதே நேரத்தில், பெண் பயிற்சியாளர் வழக்கு தொடர்பான ஆவணங்களையும் தனது தொலைபேசியையும் காவல்துறையில் சமர்ப்பித்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் சிக்கிய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜினாமா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.