ETV Bharat / bharat

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் இல்லை; G20 மாநாட்டிற்கு இந்தியா புறப்படுகிறார் - வெள்ளை மாளிகை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 7:52 PM IST

White House on US President Biden's travel to India for G20 Summit
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் இல்லை

US President Joe Biden tests negative for Covid: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இரண்டு முறை கோவிட்-19 பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே, நாளை(செப்.7) G20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா புறப்படுவதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோவிட்-19 பரிசோதனை செய்ததில் அவருக்கு கோவிட் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கோவிட்-19 பரிசோதனை செய்த போது அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிபர் ஜோ பைடனுக்கு நேற்று (செப்.5) மீண்டும் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது அதிலும் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வியாழன் (செப்.7) இந்தியா செல்ல உள்ளார். மேலும் வெள்ளிக்கிழமை (செப்.8) பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டது.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை (செப்.7) இந்தியா செல்கிறார். பின் வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறுகிறது அதன் பின் சனி மற்றும் ஞாயிற்கிழமைகளில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பைடன் கலந்து கொள்கிறார் என தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறும் போது, CDC வழிகாட்டுதலின் படி ஒரு குறிப்பிட்ட நபருக்கு அதிபருக்கும் இடையே ஆன தூரம் இருக்கும் இடங்களில் மட்டுமே அதிபர் ஜோ பைடன் முககவசத்தை அகற்றுவார். மருத்துவரின் பரிந்துரை மற்றம் ஆலோசனையின் படி நடப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியா சீனா இடையே ஆன பதற்றம் குறித்த கேள்விக்கு, G20 மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் சீனா இது போன்ற விவாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆக்க பூர்வமான பங்களிப்பு இருக்கும் என தெரிவித்தார். 18வது G20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனா அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் லீ கியாங் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணங்கள் ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை என கூறினார்.

மேலும், இந்த 18வது G20 உச்சி மாநாட்டில் பருவநிலை மாற்றம், நிலையான எரிசக்தி, சர்வதேச கடன், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளது. அதோடு பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து வளரும் நாடுகளுக்கு அதிக கடன்கள், சர்வதேச கடன் கட்டமைப்பு சீர்திருத்தம், கிரிப்டோகரன்சி மீதான கட்டுப்பாடுகள், அரசியலில் நிச்சயமற்ற தாக்கம் ஆகிவையும் மையமாக வைக்கப்படவுள்ளன என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: Bronze Nataraja statue: சாலை மார்க்கமாக புதுடெல்லிக்கு புறப்பட்டது உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.