ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: ஏப்ரல் மாதம் முதல் வார ராசி பலன்.. இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வாரம் ?

author img

By

Published : Apr 4, 2022, 6:59 AM IST

WEEKLY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான 2022ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் முதல் வார ராசிபலன்களை காண்போம்.

ஏப்ரல் மாதம் முதல் வார ராசி பலன்
ஏப்ரல் மாதம் முதல் வார ராசி பலன்

மேஷம் : உங்களின் திருமண வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் உறவுகளில் அன்பும் அக்கறையும் நிறைந்திருக்கும். கடினமான சூழ்நிலைகளில் வெற்றிபெற உங்கள் திறமையும் புத்திசாலித்தனமும் உங்களுக்கு உதவும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணியில் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். இருப்பினும், தொழில்நுட்பம் தொடர்பான பணிகளுக்கு இந்த வாரம் சிறப்பானதாகவே இருக்கும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு நன்மைகள் கூடும். செலவுகள் நிலையானதாக இருக்கும். சட்டப் பணிகளில் ஈடுபடும்போது பொறுமையாக இருப்பது நல்லது. பெரிய முடிவுகளை எடுக்க தகுந்த நேரம் இதுவல்ல. மாணவர்கள் படிப்பதற்கென அதிக நேரத்தை செலவிடுவார்கள், அவர்களின் கவனம் முழுவதும் படிப்பில் தான் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். வார இறுதி நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கலாம்.

ரிஷபம் : இந்த வாரம் ரிஷப ராசியினருக்கு சிறந்த பலன்களையே கொடுக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பார்கள். உங்கள் வாழ்க்கைத்துணை எல்லா வகையிலும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உங்கள் உறவை மேலும் மேம்படுத்த இதுவே சிறந்த தருணம். உங்கள் இருவருக்கும் இடையிலான புரிதல் வலுப்பெரும்.

புதிதாகவும் தனித்துவமாகவும் ஏதாவது செய்யவேண்டுமென்ற ஆசை உங்களுக்குள்ளே இருக்கலாம். செய்யும் வேலையில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். இருப்பினும், புத்திசாலித்தனமாக செய்வதாக நினைத்து எதையும் தவறாக செய்துவிடாதீர்கள். உயரதிகாரிகள் உங்களுடன் நன்கு பழகுவார்கள், உங்களுக்கு எப்போதும் உதவிகரமாக இருப்பார்கள்.

வருமானம் எப்போதும் போல நன்றாக இருக்கும். நீங்கள் தொழில்புரிபவர்களாக இருந்தால், உங்கள் தொழிலுக்கென புதிய மிஷின்களை வாங்குவீர்கள். மாணவர்கள் படிப்பை அனுபவித்து படிப்பார்கள். இந்த வாரம் உடல்நிலையில் எந்த பெரிய பிரச்சனையும் ஏற்படாது, ஆனால் நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். வார இறுதிநாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

மிதுனம் : திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும், அதே போல் திருமணமாகப் போகும் ஜோடிகளும் தங்கள் உறவின் அடுத்த நிலையை எண்ணி மகிழ்ச்சியடைவார்கள். மாத ஊதியத்திற்கு பணிபுரிவோர்கள் தங்கள் பணியை அனுபவித்து செய்வார்கள், ஆனால் உங்களின் போட்டியாளர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் தொழில்புரிபவர்களுக்கு நன்றாகவே இருக்கும், சிறந்த முடிவுகளும் நல்ல வருமானமும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வி கற்பதில் வெற்றிகிட்டும். அவர்களுக்கு பாடத்திட்டங்களின் மீதான பற்றுதல் அதிகரிக்கும். இந்த வாரம் உடல்நிலையைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும், பருவநிலை மாற்றம் ஏற்படும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்த வார தொடக்க நாட்களும் இறுதி நாட்களும் பயணத்திற்கு ஏற்றது.

கடகம் : கடக ராசியினர் எப்போதும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் இடையிலான சமநிலையைப் பராமரிப்பதில் வெற்றியடைவார்கள். இருந்தாலும், திருமணமானவர்களுக்கு சில தகராறுகளும் மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உங்களின் வாழ்க்கைத்துணையின் உடல்நிலையும் பாதிக்கப்படலாம்.

உங்கள் திருமண உறவில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உங்களின் திறன் மேம்படும். உங்கள் வேலையை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். மாத சம்பளம் வாங்குவோர் தங்கள் வேலையைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிப்பார்கள். நீங்கள் கூடுதல் சிரத்தையெடுத்து செயல்படுவீர்கள், எனவே குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பீர்கள்.

உயரதிகாரிகள் உங்களைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். உங்கள் தொழிலை விரிவுபடுத்தவும் வளர்ச்சியடையச் செய்யவும் இது சிறந்த நேரமாகும். உங்கள் உத்திகள் அனைத்தும் வெற்றியில் முடியும். மாணவர்களுக்கும் சிறப்பான வாரமிது. உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

சிம்மம் : இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் காதல் நிறைந்த இணக்கமான உறவைக் கொண்டிருப்பார்கள். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் பயணம் செல்வீர்கள். காதல் உறவில் இருப்பவர்களுக்கும் நல்ல நேரமிது. உங்கள் மனம் வேகமாகத் துடிப்பதாக நீங்கள் உணரலாம், அதை நன்றாகப் பயன்படுத்த இது ஒரு நல்ல நேரம். அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் தான் இருக்கிறது.

சிலர் உங்களைத் தொந்தரவு செய்ய நினைக்கலாம், எனவே கவனமுடன் இருக்க வேண்டும். உங்கள் இரகசியங்களை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். உடல்நிலை சராசரியாக இருக்கும். காரமான உணவையும் ஃப்ரைடு செய்த உணவையும் தவிர்ப்பது நல்லது. வார தொடக்க நாட்களும் இடைப்பட்ட நாட்களும் பயணத்திற்கு ஏற்றது.

கன்னி : இந்த வாரம் கன்னி ராசியினரின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தேவையற்ற சண்டை சச்சரவுகளில் தலையிடுவதைத் தவிர்க்கவும். இந்த வாரம் காதலிப்பவர்கள் தங்களுக்குள்ளேயே தங்கள் காதலை சுயபரிசோதனை செய்து கொள்வார்கள். உங்களின் இலக்குகள் யாவும் வெற்றிபெரும், அது உங்களின் மன உறுதியை அதிகரிக்கும்.

உங்கள் தொழிலை முன்னோக்கி எடுத்துச் செல்வீர்கள், சில முக்கியமான தேவையான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் லாபம் அதிகரிக்கும். சில செலவுகள் ஏற்படும் ஆனால், அது உங்கள் நிதி நிலையை பாதிக்காது. மாத வருமானம் பெரும் ஊழியர்கள் நன்கு பணிபுரிவார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறு சிறு தடைகளை எதிர் கொள்வார்கள்.

இந்த வாரம் உங்கள் உடல்நிலை வழக்கத்தைவிட சற்று சீராகவே இருக்கும். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், அதிலிருந்து விரைவாக மீண்டு வருவீர்கள். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். நீங்கள் பயணத்திற்கு திட்டமிடலாம்.

துலாம் : துலாம் ராசியினருக்கு இந்த வாரம் நன்றாகவே இருக்கும். நல்ல பலன்களையே தரும். திருமணமான தம்பதி தங்கள் இல்லத்திலேயே இனிமையான தருணங்களை அனுபவிப்பார்கள். காதலிப்பவர்கள் தாங்கள் காதலிப்பவரை சந்தோசப்படுத்தி பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். வாரத் தொடக்கத்தில் வேலையை முடிக்க சிரத்தை மேற்கொள்வீர்கள்.

அது உங்கள் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வழிவகுக்கும். மாத வருமானம் பெறும் ஊழியர்கள் உத்தியோக உயர்வு பெற வாய்ப்புள்ளது. ஆனால், சிலர் இடமாற்றம் வேண்டி உயர் அதிகாரிகளை அணுகுவார்கள். இந்த வாரம் தொழில் புரிபவர்களுக்கு சாதாரணமாகவே இருக்கும். உங்கள் வேலையை விரைவில் செய்து முடிக்க முற்படுவீர்கள்.

நீங்கள் அலுவலகமோ அல்லது வீடோ வாங்குவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் வெற்றி காண்பார்கள். போட்டித் தேர்விலும் வெற்றி காண்பார்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். உடல் நிலையில் எந்த ஒரு பெரிய பிரச்சனையும் ஏற்படாது. வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம் : இந்த வாரம் உங்களுக்கு சராசரியாக இருக்கும். எனவே நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நிறைய வேலை முடிக்கப்படாமல் இருக்கும். திருமணமானவர்களுக்கும் காதலிப்பவர்களுக்கும் இந்த வாரம் நன்றாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் காதலையும் புரிதலையும் உணர்வீர்கள்.

உங்களைப் புரிந்து கொள்ள மற்றவர்கள் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணம் நீங்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேசி பழகாததே ஆகும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆனால், உங்களுக்கும் உடன் பணிபுரிபவர்களுக்கும் இடையேயான பரஸ்பர உறவு பாதிக்கப்படும். இந்த வாரம் தொழில் புரிபவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். அதிகப்படியான வேலையைப் பெறுவீர்கள். மாணவர்கள் அனைத்து பாடத்திலும் வெற்றி பெறுவார்கள். உடல்நிலையைப் பொருத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றதல்ல. கண்டிப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் வார இறுதி நாட்களில் அதற்கு திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

தனுசு : இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும். வாரத் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் அன்புக்குரியவருடன் பயணம் மேற்கொள்வீர்கள். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும். சிலருக்கு நல்ல செய்திகள் வரும். இந்த வாரம் தொழில் புரிபவர்களுக்கு நன்றாக இருக்கும். நீங்கள் முன்பு செய்த முயற்சிகள் தற்போது அதற்கான பலன்களைத் தரும்.

வேலை செய்பவர்களும் தங்கள் வேலையை சிரத்தை மேற்கொண்டு செய்வார்கள். அது அவர்களின் திறமையை அதிகப்படுத்தும். மாணவர்கள் தங்கள் படிப்பில் வெற்றி காண்பார்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

மகரம் : இந்த வாரம் மகர ராசியினர் எதையாவது மனதில் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். மேலும், தேவையற்ற கவலையையும் கொண்டிருப்பார்கள். இது உங்களின் திருமண வாழ்க்கையையும் வாழ்க்கைத்துணையுடனான பரஸ்பர உறவையும் பாதிக்கும். இந்த தேவையற்ற சண்டை சச்சரவுகளையும் மனஸ்தாபங்களையும் உருவாக்கும்.

இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமாகும். நீங்கள் காதலிப்பவரை உங்கள் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தி வைப்பீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை நன்றாகச் செய்து முடிப்பார்கள். உங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும். உங்கள் நிதிநிலையும் மேம்படும்.

அதற்கு காரணம் நீங்கள் அதிகப்படியான வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதே ஆகும். தொழில் புரிபவர்களுக்கு இந்த வாரம் அபரிமிதமான லாபம் கிடைக்கும். மாணவர்கள் கடினமாக படிப்பார்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். எந்தவிதமான பெரிய பிரச்சனையும் ஏற்படாது. வாரத்தின் தொடக்க நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கும்பம் : இந்த வாரம் உங்கள் தொழிலில் ஒரு புதிய விரிவாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். இந்தவார தொடக்கத்திலேயே நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் காதலிப்பவரை உங்கள் வீட்டிற்கு அறிமுகப்படுத்தவும், திருமணம் செய்து கொள்ளவும் ஏற்ற தருணம் இதுவே.

திருமண ஆனவர்களுக்கும் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அதீத அன்பும் காதலும் அக்கறையும் கொள்வீர்கள். இது உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அண்டைவீட்டார் உடனான நட்பும் அதிகரிக்கும். வருமானம் சராசரியாக இருக்கும், மேற்படி வருமானமும் கிடைக்கும். ஆனால் செலவும் அதிகரிக்கும். உங்களின் விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.

சிறந்த முடிவுகளையும் பெறுவீர்கள். தொழில் புரிபவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். நிறைய ஆர்டர்களைப் பெறுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பை அனுபவித்து படிப்பார்கள். கவனமுடன் படித்து வெற்றி பெறுவார்கள். உங்கள் உடல் நிலையில் சில பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாரத் தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது.

மீனம் : இந்த வாரம் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல வாரம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். நீங்கள் காதலிப்பவராக இருந்தால் இந்த வாரம் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுக்கு இடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த வாரம் முடிந்த அளவு விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

வாரத் தொடக்கத்தில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும் அது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி செலவு செய்வீர்கள். வருமானம் சராசரியாக இருக்கும். தொழில் புரிபவர்கள் தங்களின் அறிவுத்திறனால் லாபம் பெறுவார்கள். வேலை செய்பவர்கள் தங்களின் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் நல்ல முடிவைப் பெறுவார்கள்.

இது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். டெக்னிக்கல் ஃபீல்டில் உள்ள மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். இந்த வாரம் மாணவர்களுக்கு எந்தவிதமான சவால்களும் இருக்காது. உடல்நிலை நன்றாக இருக்கும், எந்தவித பெரிய பிரச்சனையும் ஏற்படாது. இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றதாகும்.

இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.