ETV Bharat / bharat

இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...

author img

By

Published : Aug 22, 2022, 12:17 PM IST

We have to make Indian infrastructure up to world standards says Union Transport Minister Nitin Gadkari
We have to make Indian infrastructure up to world standards says Union Transport Minister Nitin Gadkari

இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் (ஏசிசிஇ) ஏற்பாடு செய்துள்ள கட்டுமானப் பொறியியலாளர்கள் மற்றும் சார்புத் தொழில்களைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார்.

அமெரிக்காவின் சாலை உள்கட்டமைப்பு தரம்: அப்போது அவர், "இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை உள்கட்டமைப்பு தரத்திற்கு, பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கூட இந்திய சாலை உள்கட்டமைப்பை உருவாக்க நான் முடிவு செய்துள்ளேன்.

இந்திய உள்கட்டமைப்பில், சாலை கட்டுமானம், நதி இணைப்பு, திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, வாகனங்கள் நிறுத்தும் வளாகம், நீர்ப்பாசனம், பேருந்து நிலையங்கள், இழுவைப் போக்குவரத்து மற்றும் கேபிள் கார் திட்டங்களுக்கு பெரும் வாய்ப்புகள் உள்ளன. ரூ.2 லட்சம் கோடியில் 26 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்களை உருவாக்கி வருகிறோம்.

எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது: அதே நேரத்தில், எங்களிடம் பல புதுமையான யோசனைகள் உள்ளன. இதன் மூலம் மேலும் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். இந்திய உள்கட்டமைப்புத் துறையின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. நல்ல தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளை உலகம் முழுவதிலுமிருந்தும் இந்தியாவிற்குள்ளிருந்தும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தரத்தில் சமரசம் செய்யாமல் செலவைக் குறைக்க மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். கட்டுமானத்தில் நேரம் மிக முக்கியமான அம்சம், அது மிகப்பெரிய சொத்தாகும். வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இது மிகவும் முக்கியமானது.

சிமெண்ட் மற்றும் பிற மூலப்பொருட்களுக்கு மாற்றினை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். எஃகுக்கு பதிலாக கண்ணாடி நாரிழை எஃகினை பயன்படுத்தலாம். போட்டி இருந்தால், செலவும் குறையும். நியாயமானதாகவும் இருக்கும். 1 லிட்டர் எத்தனால் விலை ரூ. 62, ஆனால் கலோரி மதிப்பின் அடிப்படையில், 1 லிட்டர் பெட்ரோல் 1.3 லிட்டர் எத்தனாலுக்குச் சமம். இந்த யோசனையுடன் இந்தியன் ஆயில் நிறுவனம் ரஷ்ய விஞ்ஞானிகளுடன் ஒத்துழைத்துப் பணியாற்றியது. இப்போது பெட்ரோலிய அமைச்சகம் எத்தனாலின் கலோரி மதிப்பை பெட்ரோலுக்கு சமமானதாக மாற்றுவதற்கான தொழில்நுட்பத்திற்கு சான்றளித்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: நிதிஷ் குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல்... 13 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.