ETV Bharat / bharat

சன்னி லியோனுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!

author img

By

Published : Dec 27, 2021, 1:21 PM IST

warning-to-actress-sunny-leone
warning-to-actress-sunny-leone

மத்தியப் பிரதேச மாநில உள் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா சன்னி லியோனுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

சரிகம மியூசிக் என்ற தளத்தில் வெளியாகியுள்ள மதுபன் மெயின் ராதிகா என்ற ஆல்பம் பாடலில் சன்னி லியோன் நடனமாடியுள்ளனர். டிசம்பர் 22ஆம் தேதி வெளியான இந்தப் பாடலை இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், ராதையின் பேரில் ஆபாச நடனமாடுவதால் சன்னி லியோன் ஆடியுள்ள இந்தப் பாடலை நீக்குமாறு உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த இந்து மத அமைப்பினர் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநில உள் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா சன்னி லியோனுக்கும் பாடல் குழுவினருக்கும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

அதில், பாடலை மூன்று நாள்களுக்குள் நீக்கி சன்னி லியோன் உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்காவிட்டால் காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனையடுத்து பாடல் வரிகளை மாற்றுவதாக சரிகம நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : புஷ்பா வெற்றியையடுத்து விரைவில் நடிகர் அவதாரம்? மனம் திறந்த தேவி ஸ்ரீ பிரசாத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.