ETV Bharat / bharat

Viral Video: கஞ்சா போதையில் கழுத்தை அறுத்துக்கொண்டு வீதியில் சுற்றிய ரவுடி

author img

By

Published : Oct 28, 2022, 5:18 PM IST

புதுச்சேரியில் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்துக்கொண்டு வீதியில் சுற்றிய இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து கொண்டு வீதியில் சுற்றிய ரவுடி
கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து கொண்டு வீதியில் சுற்றிய ரவுடி

புதுச்சேரி: சின்ன கொசப்பாளையாத்தைச்சேர்ந்த ரவடியான ரஷி(23) என்பவர் மீது அடிதடி வழக்குகள் உள்ளன. இவரது எதிராளிகள் கடந்த 15 நாட்களுக்கு முன் தாக்கினார்கள். இதில் காயமுற்றவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவரை வழக்கு விசாரணைக்கு நேற்று மாலை உருளையன்பேட்டை காவல் துறையினர் அழைத்துச்சென்றனர்.

ஆனால், அவர் ஒத்துழைக்காமல் வெளியேறியுள்ளார். கஞ்சா போதையில் நெல்லிதோப்பு மீன் அங்காடி அருகே பரபரப்பான சாலையில் கோபத்துடன் பிளேடால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட வந்துள்ளார். அவர் பரபரப்பான சாலையில் கழுத்தை அறுத்து ரத்தம் சொட்ட சொட்ட சுற்றிய வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.

கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து கொண்டு வீதியில் சுற்றிய ரவுடி

இதையும் படிங்க: கஞ்சா போதையில் இரவில் வந்து வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.