ETV Bharat / bharat

உத்தராகண்ட் சுரங்க விபத்து: எலி வளை சுரங்க முறையில் பத்திரமாக மீட்புப் பணியாளர் திகில் அனுபவம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 2:59 PM IST

Rat-hole miner Qureshi recounts Silkyara rescue operation: உத்தராகண்ட் சுரங்க விபத்த்தில், எலி வளை சுரங்க முறையில் பணியாளர்களை மீட்ட அனுபவம் குறித்து முன்னா குரேஷி பகிர்ந்துள்ளார்.

uttarakhand-mine-accident-rescuer-shares-experience-of-ely-vela-mining-system
எலி வளை சுரங்க முறையில் பணியாளர்களை மீட்டவர் பகிர்ந்த அனுபவம்

டெல்லி: உத்தராகண்ட்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே 4.5 தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் கடந்த மாதம் 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. அப்போது, இடிபாடுகளுக்கு மத்தியில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அவர்களை மீட்க பல்வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆஸ்திரேலியா சுரங்க நிபுணர்கள், தாய்லாந்து குகை மீட்பாளர்கள், அமெரிக்காவின் 25 டன் எடைகொண்ட ஆகர் இயந்திரம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், கடைசி நேரத்தில் ஆகர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனையடுத்து, எலி வலை முறையைப் பயன்படுத்தலாம் என எண்ணி 12 பேர் கொண்ட குழுவை டெல்லியிலிருந்து அழைத்து வந்தனர். பின்னர், 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்டனர். இது குறித்து எலி வலை பணியில் ஈடுபட்ட முன்னா குரேஷி என்பவர் ஈடிவி பாரத் செய்தி தளத்திற்குப் பிரத்தியேக போட்டி அளித்தார், அப்போது அவர் பேசியதாவது, "எனது நண்பரான வழக்குரைஞர் கானிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது அதில், 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் நீங்கள் ஈடுபடவேண்டும் என தெரிவித்தார்.

இந்த செய்தியைக் கேட்டவுடன் அவர்களை வெளியே கொண்டு வருவதில் உறுதியாக இருந்தேன். வேறு எதைப் பற்றியும் என்னுடைய மனதில் தோன்றவில்லை. பின்னர், எங்கள் குழுவுடன் நாங்கள் அனைவரும் உத்தரகண்ட் சுரங்கப்பாதைக்குச் சென்றோம். அப்போது, இடிபாடுகளில் ஒரு இயந்திரம் சிக்கியிருந்தது, நாங்கள் எங்கள் வேலையை விரைவில் தொடங்கிவிடலாம் என எண்ணிய போது, இயந்திரத்தை வெளியே எடுப்பதற்கே 3 நாட்கள் ஆகிவிட்டது.

இதை அடுத்து எங்கள் பணியைத் தொடங்கினோம், சுரங்கப்பாதைக்கு நுழைவதற்கு முன் அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் எனக் கூறிய பின்பு தான். என்னுடைய பணியைத் தொடங்கினேன்.

இதனையடுத்து, சுரங்கப்பாதையில் குழாய்கள் பதிக்கும் பணியைத் தொடங்கினோம். 12 மணி நேரத்தில் முதல் குழாய் பதிக்கப்பட்டது, அடுத்த 14 மணி நேரத்தில் மற்ற 5 குழாய்கள் பதிக்கப்பட்டு, 26 மணி நேரத்தில் பணியை முடித்து விட்டோம். கடைசி பாறையை அகற்றி சுங்க தொழிலாளர்களைப் பார்க்கும் போது அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

இதன் பின்னர், ஒருவர் பின் ஒருவராக வெளியே வர தொடங்கிய அவர்கள் என்னைக் கட்டிப்பிடித்து, "நீங்கள் எங்களுக்குக் கடவுள் போன்றவர்கள் என்று கூறினார்கள். அதை என்னால் மறக்க முடியாது. இந்த பணியில் ஈடுபட்டதற்காக நான் பெருமிதம் அடைகிறோன். சுரங்கத்தில் சிக்கிய அனைத்து தொழிலாளர்களும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கு அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காதலியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்.. சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.