ETV Bharat / bharat

இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி நாடாக அமெரிக்கா உள்ளது  - பியூஷ் கோயல்

author img

By

Published : Feb 3, 2023, 5:50 PM IST

இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி நாடாக அமெரிக்கா உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

டெல்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இன்று (பிப்ரவரி 3) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அந்த வகையில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை மார்ச் 31, 2023ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நிதியாண்டில் 59.7 பில்லியன் டாலர்கள் மதிப்பில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இந்த வர்த்தகம் வரும் நிதியாண்டில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனடிப்படையில் இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி நாடாக அமெரிக்கா உள்ளது. மொத்த சரக்கு ஏற்றுமதியைப் பொறுத்தவரை, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 23.31 பில்லியன் டாலர் மதிப்பிலும், நெதர்லாந்துக்கு 14.1 பில்லியன் டாலர் மதிப்பிலும், சீனாவுக்கு 11 பில்லியன் டாலர் மதிப்பிலும், சிங்கப்பூர் மற்றும் வங்க தேசத்துக்கு தலா 9 பில்லியன் டாலர் மதிப்பிலும் ஏற்றுமதி நடந்துள்ளது.

ஏற்றுமதி ஊக்குவிப்புக்காக, ஏற்றுமதி திட்டத்திற்கான வர்த்தக உள்கட்டமைப்பு மற்றும் சந்தை அணுகல் முன்முயற்சிகள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரிகள் நீக்கம் திட்டம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல 2022ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் மருந்துகள், கனிம ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்களின் ஏற்றுமதி RoDTEPஇன் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் கூடுதலாக ஏற்றுமதி நடந்துவருகிறது. மொத்தமாக 432 கட்டண முறைகள் களையப்பட்டு, திருத்தப்பட்ட கட்டண விகிதங்கள் ஜனவரி 16ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தத்தை அதிகரிப்பதற்கும் பொதுவான டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு ஏதுவாக சேவைகள் மற்றும் திட்டங்கள் மேம்பட்டிற்காக 12 சேவைத் துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: வீட்டின் செப்டிக் டேங்கில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.